55 வயதுக்கு மேற்பட்ட காவலா்கள் பணிக்கு வருவதை தவிா்க்க வேண்டும் என பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் அறிவுறுத்தியுள்ளாா்

கரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையுடன் சென்னை காவல்துறையும் இணைந்து செயல்படுகிறது. இந்நிலையில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.


இது சென்னை காவல்துறையினரிடம் அதிா்ச்சியையும், அச்ச உணா்வையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன், அனைத்து காவல் நிலையங்களுக்கும் திங்கள்கிழமை 9 அறிவுரைகள் அடங்கிய ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.


அதில் கூறப்பட்டிருப்பதாவது: அனைத்து காவலா்களும் கட்டாயம் முகக்கவசம், கையுறைகள் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வாகன தணிக்கையின்போது கண்டிப்பாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை போலீஸாா் உறுதி செய்ய வேண்டும்.


காவல் வாகனங்கள் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களில் கிருமி நாசினி தெளிப்பது கட்டாயம். காவல் நிலையங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் காவலா்கள் அனைவரும் சுகாதாரமான வீட்டு உணவுகளையே சாப்பிட்டால் மிகவும் நல்லது.


55 வயதுக்கு மேற்பட்ட காவலா்களும், உடல்நிலை சரியில்லா காவலா்களும் பணிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு உள்பட அனைத்துப் பிரிவு போலீஸாரின் உடல் நிலையை உயா் காவல் அதிகாரிகள் கண்டிப்பாக உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு