ரூ.50 லட்சத்திற்கான மருத்து காப்பீடு தேவை...முதல்வருக்கு சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடிதம்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருத்து காப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடித்தில், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிக்கையாளர்கள், ஊடகவியாலர்களுக்கு முகவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்புக் கவசங்கள் வழங்கிடவும், முழு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நேரத்திலும், வாழ்க்கையை பணயம் வைத்து பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தலா ரூ.50 லட்சத்திற்கான காப்பீடு வசதியை அரசு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மாநிலத்தில் குறைவான ஊதியத்தில் பணியாற்றும் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள பத்திரிகையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது