சுகாதார துறையினருக்கு கொரோனா- டாக்டர்கள் உள்பட 50 பேருக்கு மருத்துவ பரிசோதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து வட்டாரத்தில் பணிபுரியும் 50 ஊழியர்களுக்கு நேற்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.


பெரணமல்லூர் அடுத்த நாவல்பாக்கம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட முக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


இதைத்தொடர்ந்து நேற்று நாவல்பாக்கம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், மஸ்தூர் பணியாளர்கள் உட்பட 50 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.


இந்த சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு தற்காலிகமாக செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தவிர மற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.


கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் அருகிலுள்ள பெரமணமல்லூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல பரிந்துரைக்கப்படுகின்றனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்