இறந்த மருத்துவரின் உடலை புதைத்த மருத்துவர் பிரதீப் கூறியது " 50-60 பேர் கல், கட்டை கொண்டு வந்து ஆம்புலன்ஸ் உடைத்து ஓட்டுநர்களின் மண்டை உடைத்து, சுகாதார ஆய்வாளர்களை தாக்கினர்.

கொரானாவால் உயிரிழந்த மருத்துவரை சென்னை அண்ணாநகர் காவல் நிலைய எல்லையில் உள்ள வேளாங்காடு கல்லறையில் அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் பிரேதத்தை எடுத்து உள்ளே செல்லும் போது 20/4/2000 இரவு 12:15 மணியளவில்...


அவ்விடத்திற்கு அருகில் உள்ள ஹவுசிங் போர்டில் உள்ள பொதுமக்கள் சுமார் 20 ஆண்கள் 5 பெண்கள் சேர்ந்து பிரேதத்தை இங்கு அடக்கம் செய்ய கூடாது என்று ஆம்புலன்ஸின் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை கல்லால் அடித்ததில் வாகனத்தின் முன், பின்கண்ணாடிகல் உடைந்தது வாகனத்தில் இருந்த 2 நபர்களுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.


இந்நிலையில் பிரேதத்துடன் இருந்த 2 நபர்களுக்கும் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்த காரணத்தால் இருவரும் சேர்ந்து TN02 AE 7332 என்ற ஆம்புளன்ஸ் வாகனத்தில் பிரேதத்துடன் வேளாங்காடு கல்லறையிலிருந்து New hope மருத்துவமனைக்கு திரும்பி சென்ற வழியில் ega theatre அருகில் பாதிக்கப்பட்ட இருவரும் KMC மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


மேலும் இதில் காவல்துறையினரும் மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை இரவு 01.00 மணியளவில் வேளாங்காடு கல்லறைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்துவிட்டு...01.40 மணியளவில் பிரேதத்தை அடக்கம் செய்து விட்டு திரும்பி சென்றார்கள். இதை தொடர்ந்து டாக்டர் சைமன்ஹெர்குலஸ் அவர்களின் பிரேதத்தை அடக்கம் செய்ய சென்ற போது போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்