மக்கள் அலட்சியம் காட்டினால்... அதைத் தவிர வேறு வழியில்லை...! முதல்வர் விடுத்த எச்சரிக்கை

ஊரடங்கை மக்கள் பொருட்படுத்தாமல் சாலைகளில் சுற்றித்திரிந்தால் 144 தடை உத்தரவை கடுமையாக அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை செய்துள்ளார்.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உத்தரவை மீறி வெளியே வருகின்றனர்.


போலீசாரும் அவர்களை விசாரித்து, தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


சென்னை குருநானக் கல்லூரியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “பொது மக்கள் வீட்டில் தங்களை தனிமைபடுத்திக்கொள்வது மிகவும் அவசியம். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.


மக்கள் ஊரடங்கை பொருட்படுத்தவில்லை என்றால் 144 தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.


ஊரடங்கை மீறுபவர்களுக்கு எதிராக இனி சட்டம் தன் கடமை செய்யும். எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை; அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


மக்கள் அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே வராமல், ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு வேறு மாநிலங்களில் இருந்து மளிகைப் பொருட்கள் வரவேண்டி உள்ளது. விரைவில் வந்து சேரும்.


வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அச்சப்பட தேவையில்லை.


கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் தொகை இம்மாதம் இறுதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படும். வெளியூரில் இருப்பவர்கள் ஒரு மாதத்திற்குள் சென்று நிவாரணஉதவியைபெற்றுக்கொள்ளலாம்.


மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.” என்று தெரிவித்தார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்