மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை மீட்க கோரி மனு!

ஊரடங்கினால் மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கொரொனோ நோய் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளும் பல நாடுகளுக்குகிடையே நிறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சென்ற 350 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊரடங்கினால், நீண்ட நாட்களாக அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


சுற்றுலா விசாவில் சென்ற பலரின் விசா காலம் முடிவடைந்த நிலையில் தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி மலேசிய தூதரகத்திற்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


ஊரடங்கினால் இந்தியா திரும்ப முடியாமல் இருப்பது மிகுந்த மன உலைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும், உடனடியாக மத்திய மாநில அரசு கால தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுத்து


இந்தியா திரும்ப வழிவகை செய்ய உத்தரவிடக் கோரி மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பில் வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்