ரமழான் ஹதீஸ்கள் மற்று விளக்கங்கள் பிறை-3

 


பிறை: 03


நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமழான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'


அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
 
📓 நூல்: ஸஹீஹ் புகாரி : 38


ஹதீஸின் விளக்கம்


1️⃣  *நோன்பு நோற்பவர் தன் ஈமானை வழுப்படுத்திக்கொள்ளவும், நன்மையை ஈட்டி மறுமை வெற்றிக்கு வழிவகுத்துக்கொள்ளவும் ஆர்வத்துடன் நோன்பிருக்க வேண்டும்.நோன்பை கடினமானதாக கருதக்கூடாது.*


2️⃣ *தன் பாவங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு,செய்த பாவங்களை எண்ணி மனமுருகி தவ்பா செய்ய ரமளான் மாதத்தில் உறுதி கொள்ளவேண்டும்.*


3️⃣ *ரமழானில் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான காரியங்கள் நிறைந்துள்ளன.* அவற்றில் சில....


*1) நஃபிலான தொழுகை*


'நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்' புகாரி : 37. 


*2) லைலத்துல் கத்ர்*


லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது.  புகாரி : 1901.


*3) பெரும்பாவம் செய்யாமலிருத்தல்*


ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்.
 முஸ்லிம் : 396.


முஹம்மது ஃபாஹிம் ஹஸனி.,ஃபாஜில் மன்பஈ.,B.A.,


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு