சீல் வைத்த கடைகளை 3 மாதங்களுக்கு திறக்க முடியாது : சென்னை மாநகராட்சி


விதிமுறைகளை மீறியதற்காக சீல் வைக்கப்படும் கடைகளை 3 மாதங்களுக்கு திறக்க முடியாது என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




இதுகுறித்த அறிவிப்பில், “மளிகை, பல்பொருள் அங்காடிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். சென்னையில் இறைச்சி கூடங்களில் வெட்டப்பட்ட இறைச்சியை மட்டுமே விற்க வேண்டும்.


இறைச்சி கூடங்களில் வெட்டப்படாத இறைச்சியை விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இறைச்சி விற்பனை கடைகளில் சமூக விலகல் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ...


 


முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கடைகளைத் திறப்பதற்குத் தமிழக அரசு ஏற்கெனவே கட்டுப்பாடு விதித்திருந்தது. அதாவது காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.


இந்நிலையில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான நேரத்தைக் குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்



Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்