டெல்லி நிஜாமுதீன் மவுலானா சாத் எங்கே போலீஸார் தீவிரத் தேடுதல்; தனிப்படை அமைப்பு..

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத்தின் தலைவர் மவுலானா சாத் கந்த்லாவி மீது வழக்குப்பதிவு செய்யட்டுள்ள நிலையில் அவர்


எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.


டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடும் தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.


நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர்.


இந்தநிலையில்கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.


கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.
கரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


அப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலக்கலைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இந்தநிலையில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர்.


அவர்கள் அனைவரையும் நேற்று முன்தினம் அப்புறப்படுத்தி நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதனையடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆனால், வழக்குப்பதிவு செய்தபின் தப்லிக் ஜமாத்தின் தலைவர் மவுலானா சாத் கந்தலாவியைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இதற்காக டெல்லி குற்றவியல் பிரிவு சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு மவுலானாவின் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசம் முசாபர்நகர், ஷாம்லி மாவட்டங்களில் உபி போலீஸார் உதவியுடன் தேடுதல் நடத்தினர்.


மேலும் டெல்லியில் ஜாகிர் நகர், நிஜமுதீன் ஆகிய இடங்களில் 3 வீடுகளில் தேடுதல் நடத்தியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


மவுலானா சாத் கந்தால்விக்கும் கரோனா தொற்று இருக்கலாம் என்பதால் அவர் தனக்கு தானே மறைவான இடத்தில் சுயதனிமைப்படுத்திக்கொள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


உலகளவில்200 நாடுகளைச் சேர்ந்த 100 கோடி முஸ்லிம் ஆதரவாளர்கள் தனக்கு இருப்பதாக மவுலானா சாத் காந்தால்வி கூறிவருகிறார்.


ஜமாத்தின் மத்திய கவுன்சில்(சுரா) அனைத்து உத்தரவுகளையும் புறந்தள்ளி கடந்த 2015-ம் ஆண்டு முதல் மர்காஸ் நிஜாமுதீனின் தலைவராக செயல்படுவதாக ஷாம்லியின் மவுலானா இத்ரிஸ் குற்றம்சாட்டுகின்றனர்.


அவர்கள் கூறுகையில், “ மவுலானா கந்தால்வி மூத்தோர்களையும், பண்டிதர்களையும், சுராவின் உறுப்பினர்களையும் அவமதித்துவிட்டார். அமீராக தேர்வு செய்யப்படுபவர் சுராவின் பரிந்துரையில்தான் இருக்க வேண்டும்.


ஆனால் மவுலானா சாத் சுராவின் எந்த உத்தரவையும் மதிக்கவில்லை, சுயமாக முடிவு ெசய்து ஜமாத்தை கைப்பற்றினார்” எனக் குற்றம்சாட்டுகின்றனர்


டெல்லி நிஜாமுதான் தப்லிக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தின் மேற்கு மாவட்டமான ஷாம்லியில் கந்தலா எனும் பகுதியைச் சேர்ந்தவல் மவுலானா சார். இந்த பகுதி டெல்லியிலிருந்து 80கிமீ தொலைவில் இருக்கிறது.


மவுலானா சாத்தின் கொள்ளுத்தாத்தா மவுலானா முகமது இலியாஸ் கந்தால்வியால் தப்லிக் ஜாமாத் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)