திருச்சி புத்தூர் மீன் சந்தையில் தடையை மீறி திறக்கப்பட்டிருந்த 3 மீன் கடைகள் மற்றும் மீன் பெட்டிகள் பறிமுதல்..ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் விதிகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி ஆகிய இடங்களில் செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர். மேலும், கடைக்கான உரிமத்தையும் ரத்து செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 30 கிலோ கோழி கறி மற்றும் 7 கிலோ ஆட்டு கறியை பறிமுதல் செய்தனர்.


அஸ்தம்பட்டியில் கறி விற்ற காதர் பாஷா என்பவருக்கு 5 ஆயிரம் அபராதமும் விதித்து 35 கிலோ கோழி இறைச்சியை கைப்பற்றினர்.


நெல்லை
நெல்லை மாநகராட்சி பகுதிகளிலும் ஈஸ்டர் பணடிக்கையையொட்டி ஒரு கிலோ ஆட்டிறைச்சி 900 ரூபாய் வரை விற்கப்பட்டது. 120 ரூபாய்க்கு விற்பனையான கோழி இந்த வாரம் 200 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட விலைகள் உயர்ந்தே காணப்பட்டாலும் ஊரடங்கை கடைப்பிடிக்காமல் இறைச்சியை வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.


கன்னியாகுமரி
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இறைச்சி கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இங்கு ஆட்டிறைச்சி 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரையிலும், மாட்டிறைச்சி 340 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.


கோழி இறைச்சி 220 முதல் 250 க்கும் விற்பனையானது. பெரும்பாலான கடைகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இறைச்சியை வாங்க மக்கள் முண்டியடித்தனர்.


நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் ஒதுக்கிய இடத்தில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டன. ஆட்டுக்கறி 700 ரூபாய்க்கும், பிராய்லர் கோழிக்கறி 200 ரூபாய்க்கும், நாட்டுக்கோழிக் கறி கிலோ 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டும் இறைச்சிக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.


 


திருச்சி
திருச்சியில் தனி நபர் இடைவெளியை பின்பற்றாமல் கூட்ட, நெரிசல் ஏற்படுவதால், திருச்சி மாவட்டம் முழுக்க காய்கறி, பழம், மீன், இறைச்சிக் கடைகளை இன்று திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆனால், தடையுத்தரவை மீறி திருவெறும்பூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் காய்கறி, பழக்கடைகள் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் திருச்சி புத்தூர் மீன் சந்தையில் தடையை மீறி திறக்கப்பட்டிருந்த 3 மீன் கடைகள் மற்றும் மீன் பெட்டிகள் பறிமுதல்  செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு