முதல்வர் எடப்பாடியார்.. இன்னும் 3 நாட்கள்தான்.. கொரோனா சுத்தமாக காலி

சென்னை: இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள், தமிழகத்தில் புதிதாக கொரோனா வைரஸ் நோயாளிகள் இல்லாத நிலை உருவாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.


சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறியதாவது: விவசாய உற்பத்தி வீணாகாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் உரிய முறையில் கிடைக்கவும், அரசு காய்கறிகளை சப்ளை செய்யும் பணிகளை கையில் எடுத்துள்ளது.


மத்திய அரசு சிவப்பு மண்டலம், பச்சை மண்டலம் என்ற மாவட்டங்களை அறிவித்துள்ளது. பச்சை மண்டலம் என்றால் அந்த மாவட்டத்தில் ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பும் கூட இல்லை என்று அர்த்தம். சிவப்பு மண்டலப் பகுதியில் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.


கொரோனா பாதிப்பு.. இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை


ரேப்பிட் டெஸ்ட் கருவி வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது. அதற்கான தொகை செலுத்தப்பட்டுள்ளது. நமக்கு வர வேண்டியது, வேறு நாட்டுக்குப் போய் விட்டது. இருந்தாலும் தொடர்ந்து நமது அரசு எந்த நாட்டில் ஆர்டர் கொடுத்தோமோ, அந்த நாட்டில் இருந்து கொள்முதல் செய்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது


ஒரு மாநிலத்திற்கும் வரவில்லை
மத்திய அரசும் அதே நாட்டில் தான் ஆர்டர் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கும், இந்த கருவி இன்னும் வரவில்லை.


தமிழகம் இரண்டாவது ஸ்டேஜில் நிலையில்தான் உள்ளது. தற்போது நோயின் தாக்கம் குறைந்துள்ளது. நேற்றைய தினம், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 38 என்ற அளவில் இருந்தது. இப்போது அது இன்னும் குறைந்துள்ளது. 25 நோயாளிகள் என்ற அளவிற்கு வந்துள்ளது.


நோயாளி எண்ணிக்கை குறைவு
இன்னும், இரண்டு, மூன்று நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும். ஏற்கனவே நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்த பரிசோதனை நடவடிக்கை காரணமாக, நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள், நோயாளிகள் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவுக்கு குறைந்து விடும், என்று எண்ணுகிறோம்.


இதுவரை 150 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே, அடுத்த சில நாட்களில் அனைத்து நோயாளிகளும் நெகட்டிவ் என்ற நிலைக்கு மாற்றப்படுவார்கள். அதை நாம் பார்த்து மகிழப்போகிறோம். இவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு