தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை...

கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 


விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சடையம்பட்டி, மேட்டுப்பட்டி, இருக்கன்குடி, தாயில்பட்டி, உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து சூழலை குளிர்ச்சியாக்கியது. 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. 


தேனி மாவட்டம் போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டித் தீர்த்தது. போடி, கம்பம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. 


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
”கீழ இறங்குடா.. உன்னை கொன்னுடுவேன்” : மின் இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரை கல்லை கொண்டு மிரட்டிய பெண்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image