உலகில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டியது..

உலக அளவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது.


மனித குலத்துக்கு கண்ணுக்கு தெரியாத புதிய எதிரியாக உருவெடுத்து கொரோனா வைரஸ் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.


உலகம் முழுவதும் இந்திய நேரப்படி, மாலை ஆறு மணிக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்ட, பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 71 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 7 லட்சத்து 92 ஆயிரத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஸ்பெயினில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோரும், இத்தாலியில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், பிரான்சில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஜெர்மனியில் சுமார் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேரும், பிரிட்டனில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 இதனிடையே, அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 42 ஆயிரத்து 500ஐயும், ஸ்பெயினில் 21 ஆயிரத்தையும், இத்தாலியில் 24 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தையும், பிரிட்டனில் 16 ஆயிரத்து 500 கடந்துள்ளது. 


உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா நோயிலிருந்து 6 லட்சத்து 57 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 16 லட்சத்து 70 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் நிலையில், 57 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு