22,000 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா: உலக சுகாதார அமைப்பு தகவல்


மருத்துவ ஊழியர்களுக்கு பணிபுரியும் இடம் மற்றும் சமூகப் பரவலின் மூலமாக கொரோனா பரவியிருந்தாலும், பெரும்பாலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மூலமாகவே தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 22,000 சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது


ஏப்ரல் 8 ஆம் தேதி நிலவரப்படி உலகின் 52 நாடுகளைச் சேர்ந்த 22,073 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


முழுமையான தரவுகள் கிடைக்காத நிலையில் இது தோராயமான எண்ணிக்கை என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், மருத்துவ ஊழியர்களுக்கு பணிபுரியும் இடம் மற்றும் சமூகப் பரவலின் மூலமாக கொரோனா பரவியிருக்கும் .


இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மூலமாகவே தொற்று ஏற்பட்டிருப்பதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் இந்தப் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு