2 ஆண்டு வரை சிறை கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு
ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றுபவர்களை கைது செய்து 2 வருட சிறைத்தண்டனை விதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு 10வது நாளைஎட்டியுள்ள நிலையில், அத்தியாவசிய மற்றும் மருந்துப் பொருட்கள் வாங்க மட்டும் மக்கள் வெளியே வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தவறாகப் பயன்படுத்தி ஏராளமானோர் காரணமில்லாமல் வீதிகளில் சுற்றி வருகின்றனர். ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா அனுப்பிய கடிதத்தில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றுபவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் வழக்குகளை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.