திருவள்ளூரில் செவிலியர் மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் என இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

திருவள்ளூரில் செவிலியர் மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் என இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


 சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவிலியர் மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் திருவள்ளூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.


திருவள்ளூரில் இன்று மட்டும் 2 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் செவிலியர் ஒருவருக்கும், ஒன்டிகுப்பம் பகுதியில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர் வசிக்கும் பகுதியான கரையான்சாவடி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் வசிக்கும் பகுதியான ஒன்டிகுப்பம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


ஏற்கெனவே 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இருவரையும் சேர்த்து திருவள்ளூரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.


இந்த நிலையில், கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்கள் இதுவரையில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


அதே போல, திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்பட்டு இருந்தவர்கள் 32 பேர் கொரோனா தொற்று இல்லையென இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


எனினும், அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்