கொரோனா வார்டாக மாறிய புனே மசூதி...

புனேயில் உள்ள மசூதி ஒன்று, 80 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றப்பட்டுள்ளது.


இந்தியாவிலேயே மஹாராஷ்டிரா தான் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது. இங்கு கொரோனாவுக்கு 400 பேர் பலியாகி உள்ள நிலையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. மாநிலத்தில் அதிகபட்சமாக மும்பையில் 6,169 பேருக்கும், புனேயில் 1,174 பேருக்கும் தொற்று உள்ளது.


இந்நிலையில் புனேயில் உள்ள மசூதியின் முதல் மாடி, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. 9 ஆயிரம் சதுர அடி வசதி கொண்ட மசூதியின் முதல் மாடியான அஸாம் கேம்பஸ் இன்ஸ்டிடியூட், 80 படுக்கை வசதிகளுடன் தனிமை வார்டாக மாற்றப்பட்டுள்ளது.


இதுகுறித்து எம்.சி.இ.எஸ்., தலைவர் இனாம்தார் கூறுகையில், மசூதியின் ஒரு பகுதியை கொரோனா தனிமை வார்டாக மாற்ற அனுமதி பெற்றுள்ளோம். இதன்படி முதல் தளம் தயாராகி உள்ளது.


தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராடும் மாநில அரசுக்கு உதவ, எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்.


தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள், மின்விசிறிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மசூதியிலேயே உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


புனே கலெக்டர் கிஷோர் ராம் கூறுகையில், 'அஸாம் கேம்பஸ் நிர்வாகத்தின் இந்த ஏற்பாடு பரிசீலிக்கப்படும். விசாலமான இடங்களை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். சோதனை செய்தபின் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்' என்றார்.


அஸாம் கேம்பஸ் நிர்வாகம், இதுவரை ஏழைகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்களை வினியோகித்துள்ளது. கோந்வா உள்ளிட்ட நகரின் பல பகுதிகளுக்கும் 5 ஆம்புலன்ஸ் வசதியுடன் 25 டாக்டர்களையும் அனுப்பி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)