மலேசியா திரும்ப முடியாமல் தவித்த 179 பேர்... உதவிக்கரம் நீட்டிய தமிழர்!

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த 179 மலேசியத் தமிழர்களைத்  தனி விமானம் மூலம் மலேசியாவுக்கு அனுப்பி வைத்த தமிழரின் செயல்  பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.


உலகம் முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரே சொல் 'கரோனா'. வல்லரசு நாடுகள் முதல் வறுமையில் தவிக்கும் நாடுகள் வரை கரோனா வைரஸால் உயிர் பயத்தில் ஒவ்வொரு நாளையும் கடக்கத் தொடங்கியுள்ளது.


கரோனா தடுப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 22-ந்தேதி முதல் பன்னாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.இதனால் மலேசியாவில் இருந்து தமிழகம் வந்திருந்த மலேசியத் தமிழர்கள் செய்வதறியாது தவித்தனர்.அவர்கள் மலேசிய நாட்டிற்குச் செல்ல வழியின்றி 14 நாட்கள் முடங்கினர்.


இதுபற்றிய தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ் குமார்,மலேசியா திரும்ப முடியாமல் நிற்கதியாய் தவிக்கும் மலேசியத் தமிழர்களை எப்படியாவது சொந்த நாட்டிற்கு அனுப்பிட திட்டமிட்டார்.


அதன்படிதமிழகத்தில் பரிதவிக்கும் மலேசிய தமிழர்களின் விபரங்களைச் சேகரித்து முதற்கட்டமாக 179 பேரை மலேசியாவிற்கு அழைத்துசெல்வது என முடிவெடுத்தார்.


இதைத்தொடர்ந்து அவரது ப்ளஸ் மேக்ஸ் குரூப் நிறுவனத்தின் மூலம் 40 லட்ச ரூபாய் செலவில் தனிவிமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.


இதனிடையே இந்தியா மற்றும் மலேசியா என இருநாட்டு அரசாங்கங்களிடம் பேசிய டத்தோ பிரகதீஷ் குமார், விபரங்களை எடுத்துக்கூறினார்.


 அவரின் நல்லெண்ண முயற்சிக்கு இருநாட்டு அரசும் சம்மதிக்க, மலேசிய தமிழர்களை மலேசியா அழைத்துச் செல்வதற்கான முயற்சிகள் மளமளவென நடைபெற்றது.


அதனைத்தொடர்ந்து டத்தோ பிரகதீஷ் குமார் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்த தனிவிமானம் திருச்சி விமான நிலையத்தில் தயாராய் இருந்தது.இதுபற்றிய தகவல் தமிழகத்தில் இருந்த 179 மலேசியத் தமிழர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.


அவர்கள்உற்ற நேரத்தில் உதவிய டத்தோ பிரகதீஷ் குமாருக்கு நன்றி தெரிவித்த பின்னர் சொந்த நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
”கீழ இறங்குடா.. உன்னை கொன்னுடுவேன்” : மின் இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரை கல்லை கொண்டு மிரட்டிய பெண்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image