சென்னையில் 163 பேர் பாதிப்பு.. ஈரோடு, நெல்லையில் நோயாளி எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு.

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது . இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.


இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். அப்போது அவர் கூறுகையில் இந்த தகவலை தெரிவித்தார்.


இதன்பிறகு மாவட்ட வாரியாக, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வெளியிடப்பட்டது. அதுகுறித்த தகவலை பாருங்கள்:


தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 163ஆக அதிகரித்துள்ளது. அங்கு இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நேற்றைவிட இன்று அதிகம்.. புதிதாக 96 பேருக்கு கொரோனா.. தமிழக மொத்த எண்ணிக்கை 834ஆக உயர்வு


திண்டுக்கல் 46, திருநெல்வேலி 56, திருச்சி 36, நாமக்கல் 41, ராணிப்பேட்டை 27, செங்கல்பட்டு 28, மதுரை 25, கரூர் 23, தேனி 40, தூத்துக்குடி 22, விழுப்புரம் 20, திருப்பூர் 26, கடலூர் 13, சேலம் 14, திருவள்ளூர் 13, திருவாரூர் 13, விருதுநகர், தஞ்சை தலா 11, நாகை 12, திருப்பத்தூர் 16, திருவண்ணாமலை 9, கன்னியாகுமரி 14, காஞ்சிபுரம் 6, சிவகங்கை 6, வேலூர் 11, நீலகிரி 4, தென்காசி 3, கள்ளக்குறிச்சி 3, ராமநாதபுரம் 2, அரியலூர் மற்றும் பெரம்பலூர் தலா 1. ஆக மொத்தம், தமிழகத்தில் மொத்தம் 834 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. நெல்லையில் இன்று, புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)