தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் நேற்று வரை 1372 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது.


இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரேநாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


நேற்றுவரை சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235-ஆக இருந்த நிலையில் இன்று 285 ஆக அதிகரித்துள்ளது.


இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 46. இதுவரை மொத்தமாக 411 பேர் வீடு திரும்பியுள்ளனர்.


வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 - ஆக அதிகரித்துள்ளது. 1048 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21,381-ஆக உள்ளது.