இந்தியாசெப்டம்பர் மாதத்தில் விற்பனை.. கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000..! : இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனம் அறிவிப்பு..

மும்பை : உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கவும் பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.


இந்த நாடுகள் அனைத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று தடுப்பூசிகள் தயாராக மேலும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று தான் கூறி வருகின்றன.


ஆனால்இந்தியாவில் புனேவை தலைமை இடமாக கொண்டு இயங்கிவரும் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்றும், இந்தியாவிற்கும், மற்ற நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது


இது குறித்து பேசிய செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாகி அடார் பூனாவல்லா கூறுகையில், எங்கள் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும், மேலும் அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு நிறுவனமான கோடஜெனிக்ஸ் என்ற நிறுவனத்துடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுகள் நடந்துவருவதாகவும் கூறியுள்ளார்.


மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஏழு பேருக்கு கொரானா தடுப்பூசியை சோதனை முயற்சியாக செலுத்தியுள்ளது எனவும், பிரிட்டனை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் சீனா, அமெரிக்கா, இந்தியர்களுக்கும் கூட கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.


எப்படியும்செப்டம்பருக்குள் தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றுவிடும். விலையை பொறுத்தவரை தற்போத துல்லியமாக கூற முடியாது, ஆனால் ஒரு தடுப்பூசியின் விலை தோராயமாக 1000 ரூபாயாக இருக்கலாம் என்று அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்