இலங்கைக்கு 10 டன் மருந்துப்பொருட்களை பரிசளித்த இந்தியா..! 

கொரோனா வைரஸ் நெருக்கடிக் காலத்தில் இலங்கைக்கு 10 டன் மருந்துப்பொருட்களை இந்தியா பரிசாகக் கொடுத்துள்ளது.


 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதால், மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சானிடைசர்கள், முகக்கவசங்கள் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்களுக்கும், இதர மருந்துப்பொருட்களுக்கும் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.


மேலும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


இந்த மருந்தை தங்களுக்கு இந்தியா தர வேண்டும் என்றும், இல்லையென்றால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.


இதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியத் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றன.


இந்நிலையில் இலங்கைக்கு 10 டன் மருந்துப்பொருட்களை இந்தியா பரிசாக அளித்துள்ளது. இந்த மருந்துப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


அவசரக் காலங்களில் இலங்கையுடன் இந்தியா நிற்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த மருந்துப்பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டிருப்பதாக இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
”கீழ இறங்குடா.. உன்னை கொன்னுடுவேன்” : மின் இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரை கல்லை கொண்டு மிரட்டிய பெண்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image