சென்னை : குழந்தையின் பிறந்தநாளையொட்டி, போலீஸ்காரர் ஒருவர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிதி அளித்தார்.
சென்னை, அம்பத்துார் எஸ்டேட் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றுபவர் அன்பழகன்.
இவரது மகன் தர்ஷித் அபினவ். இந்த குழந்தைக்கு, நேற்று முதலாம் ஆண்டு பிறந்த நாள்.
இதையொட்டி, அன்பழகன், மனைவி ரம்யா மற்றும் குழந்தையுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதனிடம் நேற்று முன்தினம், 10 ஆயிரம் ரூபாய் நிதி அளித்தார். அப்போது, குழந்தையை வாழ்த்திய கமிஷனர், அன்பழனுக்கும், அவரது மனைவிக்கும் பாராட்டு தெரிவித்தார்.