சென்னை கோயம்பேடு மார்கெட் பகுதியில் நாளை முதல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதி....

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, பொது மக்கள் மார்கெட் பகுதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்


என்றும், சிறு வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக்கொண்டது.
மேலும், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் தளங்கள் வழியாகவும் தனி எண் மூலமாகவும் காய்கறிகளை ஆன்லைனில் வாங்கலாம்.


வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், பொதுமக்கள் பலர் கோயம்பேட்டில் தினமும் குவிந்து வருகின்றனர்.


இந்தநிலையில், நாளை முதல் காலை 4 மணி முதல் 7-30 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனத்தில் வரும் சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நேரக்கட்டுப்பாட்டை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்