ரமழான் ஹதீஸ்கள் மற்றும் விளக்கங்கள்-பிறை: 02

இன்றைய ஹதீஸ்:


 1)வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல்,


 2) தொழுகையை நிலை நிறுத்துதல்,


 3) ஜகாத்து வழங்குதல்,


 4) ஹஜ் செய்தல்,


 5) ரமாலானில் நோன்பு நோற்றல்


ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்:*  *ஹஜ்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி)


நூல்: ஸஹீஹ் புகாரி - 08


🏵️🏵️ *ஹதிஸின் கருத்து* 🏵️🏵️


1️⃣ரமழான் நோன்பு இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாகும். இது மார்க்கத்தின் ஊர்ஜிதமான ஆதாரங்களினால் ஃபர்ளு என்பதாக அனைவராலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே இது கடமை இல்லை என்று மறுப்பவன்  காஃபிராகிவிடுவான்.


2️⃣ ரமழான் மாதத்தின் அனைத்து நோன்புகளை அல்லது சில நோன்புகளை தக்க காரணமின்றி வேண்டுமென்றே விட்டு விடுவது பெரும்பாவங்களில் மன்னிக்கமுடியாத மாபெரும் பாவமாகும். நோன்பை விடுபவர்களை கண்டித்து மார்க்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.  எனவே மறுமையை ஈமான் கொண்ட முஸ்லிம் வேண்டுமென்றே நோன்பை விடமாட்டார்.


3️⃣மார்க்கம் அனுமதித்த இக்கட்டான காரணத்தினால் நோன்பை விடவேண்டிய சூழல்  ஏற்படுமாயின் வேறோரு நாளில் நோன்பை கழா செய்வது வாஜிபாகும்.


4️⃣நோன்பு வைக்க சக்திப்பெறாத முதியவர் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஓர் ஏழைக்கு  உணவு வழங்க (வஸியத் செய்ய) வேண்டும்.


✒️ *முஹம்மது ஃபாஹிம் ஹஸனி., ஃபாஜில் மன்பஈ.,B.A.,*


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு