ஊரடங்கில் இயங்கிய தொழிற்சாலை.. சோதனை செய்த அதிகாரிகள்.. சுவர் ஏறி தப்பித்த தொழிலாளர்கள்...

ஸ்ரீபெரும்புதூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இயங்கி வந்த தொழிற்சாலையை சோதனையிட வந்த கோட்டாட்சிரை தடுத்தி நிறுத்தி, ஊழியர்களை சுவர் ஏறி குதித்து தப்பிக்க செய்த தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில், இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை பராமரிப்பு பணிக்காக ஊழியர்களை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரி இருந்தது.


நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பத்து நபர்களை மட்டுமே பணியில் உட்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனமோ, சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வைத்து தொழிற்சாலையை இயக்கி வந்துள்ளது.


இதை அறிந்த ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சம்பந்தபந்தப்பட்ட தொழிற்சாலையை நேரடியாக ஆய்வு செய்ய சென்றுள்ளார்.


அப்போது நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் கோட்டாட்சியரை நிறுவனத்தின் முன்னே 30 நிமிடங்களுக்கு மேலாக நிற்க வைத்து விட்டு, ஊழியர்களை சுவர் ஏறி தப்பித்துச் செல்ல வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது


இதனையடுத்து தொழிற்சாலை வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை சோதனை செய்தார் கோட்டாட்சியர். அப்போது 30 இரு சக்கர வாகனங்களும், நான்கு நான்கு சக்கர வாகனங்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் தொழிற்சாலையில் 100 நபர்களுக்கு மேல் இருந்ததும் உறுதிசெய்யப்பட்டது.


இதைத் தொடர்ந்து விதிமுறைகளை மீறி நிறுவனத்தை இயங்கியது குறித்த விளக்கத்தை மூன்று நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்