அண்ணாச்சிஸ் ஆல்வேஸ் உஷார்...! பணத்தை டெட்டாலில் போடுகின்றனர்

ரூபாய் நோட்டு வழியாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு மளிகைக் கடைக் காரர் ஒருவர் பணத்தை டெட்டால் கலந்த தண்ணீரில் நனைத்து வாங்கும் நூதன செயலில் இறங்கி உள்ளார்.


எப்போதும் உஷாராக இருக்கும் அண்ணாச்சியின் விழிப்புணர்வு  நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..


தொட்டால் பரவும் கொடிய கிருமியான கொரோனாவிடம் இருந்து தப்பிக்க நம்மவர்கள் செய்யும் விழிப்புணர்வு நடவடிக்கை ஒவ்வொன்றும் விழிதிறக்க செய்கின்றது.


கேரளாவில் வீட்டிற்கு வரும் செய்தி தாள் மூலம் கொரோனா கிருமி பரவிவிடக்கூடாது என்று முன் எச்சரிக்கையாக, செய்தித்தாளை சமையல் கட்டில் பயன்படுத்தும் இடுக்கியால் கவ்வி எடுத்துச்சென்று சூடான அயர்ன் பாக்சால் தேய்த்து செய்திகளை சுட சுட படிக்கும் இந்த உஷார் சேச்சிக்கு நம்ம ஊரு அண்ணாச்சி ஒன்றும் குறைந்தவரில்லை..!


சோமநாத புரத்தில் மளிகைக் கடை நடத்திவரும் ஒருவர் தங்கள் கடைக்கு முன்பாக மஞ்சள் தண்ணீரை ஆறாக ஓடவிட்டுள்ளார்.


கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை, கை கால்களை மஞ்சள் வேப்பிலை கலந்த நீரால் நன்றாக கழுவிய பின்னரே வரிசையில் நிற்கவே அனுமதிக்கிறார்


கடை வாசல் அருகே முகக்கவசத்துடன் உஷாராக அமர்ந்திருக்கும் கடைக்காரர், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கும் வாடிக்கையாளர் தரும் ரூபாய் நோட்டுக்களையும்


சில்லரைகாசுகளையும், கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்று தனது அருகில் உள்ள டெட்டால் மற்றும் சோப்புத்தூள் கலந்த தண்ணீரில் அலசி காயப்போடுகிறார்..!


கைகுட்டையால் முகத்தை கட்டிக் கொண்டு வரும் தனது குட்டி பெண் மூலமாக வாடிக்கையாளர் கேட்கும் பொருட்களை வழங்குகிறார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் கைகளை கழுவ வேண்டும், வரிசையில் இடைவெளி விட்டு நின்று வாங்குவதும் கட்டாயம் என்று அறிவித்துள்ள கடைக்காரர், ரூபாய் நோட்டுக்கள் தான் ஏழை பணக்காரர், உள்ளூர்க்காரர், வெளியூர்க்காரர் என பலரது கைகளுக்கும் எளிதாக சென்று வரும் என்பதால் அவறை சோப்புத்தூள் கலந்த தண்ணீரில் கழுவி காயவைப்பதாக தெரிவித்தார்


பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் பண விஷயத்தில் நம்ம அண்ணாச்சி ஆல்வேஸ் உஷார் என்று சொல்ல வைத்திருக்க்கும்


இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி, தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கொடிய கிருமி கொரோனாவின் விபரீதத்தை விழிப்புணர்வாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு