ஒரு கையில் மண்ணெண்ணெய்,...... இன்னொரு கையில் செல்போன்...

 


தற்கொலை செய்து கொள்வதை அப்படியே வீடியோவாக ரெக்கார்ட் எடுத்து வைத்திருந்தார் இளம்பெண் ஒருவர்..


இந்த வீடியோவை கண்டு போலீசாரே அதிர்ந்து போய்விட்டனர்!


திருப்பத்தூர் பெரியகரம் அண்ணநகர் காலனியை சேர்ந்தவர் தீபா.. இவருக்கு வயது 25..


அவரது கணவர் ராகுல்.. ஒரு தனியார் டிவி ஷோரூமில் வேலை பார்ப்பவர்..


இதே ஷோரூமில்தான் தீபாவும் வேலை பார்த்தார்..


இருவருக்கும் லவ் ஏற்பட்டது.ஆனால் 2 பேரின் வீட்டிலும் இவர்களின் காதலை ஏற்று கொள்ளவில்லை.. அதனால் சில மாசத்துக்கு முன்புதான் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்து கொண்டனர்...


திருப்பத்தூர் சேர்மன் ரங்கநாதன் தெருவில் ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தனர்...


இப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் தீபா. இந்நிலையில் திடீரென மனமுடைந்த தீபா உடம்பில் மண்எண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டார்..


அப்போது இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. ஆனால் அதற்குள் தீபாவின் உடம்பெல்லாம் தீப்பற்றி எரிந்தது.. உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்


ஆனால் தீபா பரிதாபமாக உயிரிழந்தார். தீபா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற தெரியவில்லை.. திருப்பத்தூர் டவுன் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்....


அப்போதுதான் தீபாவின் செல்போனையும் ஆய்வு செய்தனர். அதில் தீபா தன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டே, தீயை பற்ற வைக்கும் வீடியோ இருப்பதை கண்டு அதிர்ந்தனர்..


இந்த வீடியோவையும் தீபா எதற்காக எடுத்தார் என்று தெரியவில்லை.இளம் கர்ப்பிணி உடம்பில் தீயை வைத்து தற்கொலை செய்து கொண்டதை ரெக்கார்ட் செய்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.