தைரியம் இருந்தா இந்த கூட்டத்தை கலைச்சு பாருங்க.....*என்று போலீசாருக்கு பெண் சாமியார் கையில் கத்தியுடன் சவால் விட்டார்.......

பொறுத்து பொறுத்து பார்த்த போலீசார் பெண்சாமியாரை தரதரவென இழுத்து சென்று கைது செய்துவிட்டனர்......


மொத்த இந்தியாவிற்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது..


பொது இடங்களில் யாரும் கூட கூடாது என்றும் தடை உள்ளது.


இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தியோரா மாவட்டத்தில் இந்த தடையை மீறின ஒரு சம்பவம் நடந்துள்ளது..


இங்கு ஒரு ஆசிரமம் நடந்து வருகிறது.. மா ஆதி சக்தி என்ற பெண் சாமியார்தான் ஆசிரமத்தை நடத்துகிறார். லாக்டவுன் பிறப்பிக்கப்பட்ட அன்றுகூட ஆசிரத்தை திறந்து வைத்திருந்தார்..


மத போதனைக்கும் ஏற்பாடு செய்திருந்தார். அதனால் நூற்றுக்கணக்கானோர் ஆசிரமத்தில் கூடியிருந்தனர்


இந்த ஆசிரமம் அந்த பெண்ணின் வீட்டிலேயேதான் நடத்தப்படுகிறது. அந்த வீட்டுக்குள் 100 பேர் வரை கூடியிருந்தனர். இந்த விஷயம் போலீசாருக்கு எட்டியதும் விரைந்து வந்தனர்.. கூட்டத்தை கூட்டக்கூடாது.. சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என்று பெண் சாமியாரிடம் கேட்டுக் கொண்டனர்..


ஆனால் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை.. "அதெல்லாம் முடியாது.. என் வீட்டில நான் கூட்டம் போட்டால் உங்களுக்கென்ன?" என்று திருப்பி கேள்வி கேட்டார்..


ஒரு கட்டத்தில் அந்த சாமியார், "எங்கே என்னை தடுத்து பாருங்க பார்க்கலாம்" என்று சொல்லி கொண்டே கையில் ஒரு பெரிய வாளை எடுத்து கொண்டு சவால் விட்டார்.


ரெட் கலர் புடவையில் தலையை விரித்து போட்டுக் கொண்டு, பெரிய சைஸ் பொட்டு, கையில் வாள் என மிரட்டலாக இருந்தார் பெண் சாமியார்..


அப்போதும் போலீசார் "தயவு செய்து கூட்டத்தை கலைத்து விடுங்கள்.. கிருமி பரவும்" என்று எச்சரித்தும் பலனில்லை...


அந்த பெண் சாமியாரும் கையில் கத்தியை எடுத்து சுழட்டியபடியே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத போலீஸார் பெண் சாமியாரை வெளுத்து வாங்க தொடங்கிவிட்டனர்.. அவரது ஆதரவாளர்களையும் விரட்டி துவைத்தனர்... பெண் சாமியாரை தர தரவென இழுத்து சென்று கைதும் செய்தனர்.


பெண் சாமியாருக்கே அடி வெளுக்கவும் கூட்டம் தலைதெறித்து ஓட தொடங்கியது.. இந்த பக்தர்கள் எல்லாரும் பீகாரை சேர்ந்தவர்களாம்.. மதபோதனையை கேட்க மாநிலம் விட்டு மாநிலம் பெரும்பாலானோர் கிளம்பி வந்துள்ளனர்.எல்லோரையும் போலீசார் விரட்டியடித்த பிறகுதான் அங்கு அமைதி திரும்பியது..


ஆனால் பெண் சாமியார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


வைரஸை தடுக்க போலீசாரின் இந்த முயற்சிக்கு மாநில மக்கள் தங்கள் ஆதரவையே தெரிவித்துள்ளனர்..


100 பேருக்கு மத்தியில் கையில் வாளுடன் போலீசாருக்கு சவால் விட்ட இந்த பெண் சாமியாரின் வீடியோ வைரலாகி வருகிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு