சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை!

கொரோனா வைரஸ் பரவி வருகின்ற சூழலில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் தலைமைச் செயலக சட்டமன்ற நுழைவு வாயிலில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் , எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது.


மின்மாற்றிஅமைக்க அரசு முன் வருமா?
திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் அரிச்சந்திராபுரம் தீன் நகரில் தனியாக மின்மாற்றி அமைக்க அரசு முன் வருமா?


திருவாலங்காட்டில் உள்ள சக்கரை ஆலை பகுதியில் 110 கேள்வியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தீர்கள். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கையில் தி.மு.க சார்பில் எதிர்க்கட்சி கொரடா சக்கரபாணி மற்றும் ராணிப்பேட்டை காந்தி ஆகியோர் விவாதத்தில் பங்கேற்கின்றனர்.