பா.ஜ.க வேண்டாம்!' - ரஜினியை அதிருப்திபடுத்திய ஒரு விஷயம் என்ன..
``நாம் கட்சி ஆரம்பிக்கும் முன்பே நம்மை பா.ஜ.க-வின் முகமாகத்தான் பார்க்கிறார்கள். எக்காரணத்தைக்கொண்டும் அவர்களோடு நாம் சேர்ந்துவிடக் கூடாது. அப்படிச் சேர்ந்த அ.தி.மு.க-வின் நிலைமையைப் பாருங்கள்" என ஆளும்கட்சியைப் பற்றி விவாதம் நடத்தியிருக்கிறார்கள். ``தமிழ்நாட்டில் இரு ஆளுமைகள் இல்லை.
இந்த நேரத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டால் தலைவரை அரியணையில் அமர வைத்துவிடலாம்" என்று சொல்லக் கூடியிருந்த மாவட்டச் செயலாளர்கள் கைத்தட்டலால் ரஜினியின் முகம் பிரகாசமாக ஜொலித்திருக்கிறது.அப்படி இருந்தும் வெளியே வந்த ரஜினி,
``ஒரு விஷயம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை ஏமாற்றம் அளிக்கிறது" என மீண்டும் பல கதையைச் சொல்லிக் கிளம்பியிருக்கிறார். ரஜினி அப்படிச் சொல்ல என்ன காரணம். கூட்டத்தில் என்ன பேசினார் என்று விசாரிக்கத்தொடங்கினோம்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகச் சொல்லி கால் நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.
இதில் முதல் கட்டமாகத் தமிழகம் முழுவதும் மக்கள் மன்றத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாதம்தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, கட்சி தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியையும் கட்சிக்கொடி, கொள்கைகளை என்ன என்று அறிவிப்பார் என்று மிகுந்த சந்தோஷத்தோடு நிர்வாகிகள் உள்ளே சென்றார்கள். அங்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள்.
கடும் பரிசோதனை நடத்திய பின்னரே அவர்களை உள்ளே அனுமதித்திருக்கிறார்கள்.கூட்டம் தொடங்கியதும், ``எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள். வீட்டுல எப்புடி இருக்காங்க" என்று ரஜினி கேட்க பதிலுக்கு நிர்வாகிகள், `நல்லா இருக்காங்க தலைவா' என்று சொல்ல, `அவுங்க நல்லா இருந்தால்தான் நாம் நல்லா இருக்க முடியும்' என அவருக்கே உண்டான பாணியில் பேசி சிரித்ததும் நிர்வாகிகள் கூட்டமே முக மலர்ச்சியோடு தொடங்கியது.
``நம்முடைய மன்றம் எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சிக்கணும்னு தான் உங்கள வர வச்சிருக்கிறேன். இன்று நான் பேசப் போவதில்லை. நீங்கள்தான் பேசப்போகிறீர்கள்" என நிர்வாகிகளை முழுமையாகப் பேசுமாறு சொன்னார்.
அதன்பிறகு, மாவட்டத்தில் நடக்கும் கூத்துகளை நிர்வாகிகளும் கொட்டத் தொடங்கினார்கள். கூட்டத்தில் என்ன நடந்தது என்று கலந்துகொண்டவர்களிடம் பேசினோம். `
`நாம் எப்போது கட்சி ஆரம்பிப்போம்ன்னு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தலைவா?” என்று ஒரு மாவட்டத் தலைவர் பேச, ``ஏற்பாடுகள் ரொம்ப தீவிரமாக நடந்துக்கிட்டிருக்கு. சீக்கிரமே நாம அறிவிப்பை வெளியிட்டிடுவோம்” என்று பதில் சொன்னார் ரஜினி... "தமிழ்நாட்டில் இரு ஆளுமைகள் இல்லை.
இந்த நேரத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டால் தலைவரை அரியணையில் அமர வைத்துவிடலாம்" மாவட்டச் செயலாளர்கள் சிலர் ரஜினியின் புகழ்பாடினார்கள்.
அதற்கு ரஜினி நம்மைப் பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள். நாம் மன்றத்தை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதத்தில் பேசுங்கள் என்றார். அதன் பிறகுதான் ஆரம்பித்தார்கள்.
நாம்கட்சி ஆரம்பிக்கும் முன்பே நம்மை பா.ஜ.க-வின் முகமாகத்தான் பார்க்கிறார்கள். எக்காரணத்தைக்கொண்டும் அவர்களோடு நாம் சேர்ந்துவிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
அத்தோடு பி.ஜே.பி-யோடு கூட்டணி வைத்த அ.தி.மு.க-வின் நிலைமையைப் பாருங்கள். அவர்களால் எந்த முடிவும் தன்னிச்சையாக எடுக்க முடியாமல் இருக்கிறார்கள்.
அத்தோடு அவர்கள் கொண்டுவரும் திட்டங்களைக்கூட எதிர்த்து விமர்சிக்க முடியாமல் இருக்கிறார்கள். தமிழகத்தின் முக்கியமான கட்சியான அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம்முடைய நிலைமையை நினைத்துப் பாருங்கள் என்று சொன்னதும், ரஜினி குறுக்கிட்டு, `கண்டிப்பாக அவர்களிடம் நாம் சேரப்போவதில்லை.அதில் நான் தெளிவாக இருக்கிறேன்' என்றார். `அப்படியென்றால் நாம் கூட்டணியே வைக்க மாட்டோமா...
கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திக்க முடியுமா?” என்றும் சிலர் கேட்டிருக்கிறார்கள். அதற்குப் பதில் கூடிய விரைவில் வரும், என்று மீண்டும் ட்வீஸ்ட் வைத்திருக்கிறார். நம்மைப்பற்றி மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
இந்த நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள். பின்னர் மன்ற பிரச்னை பக்கம் தாவினார். மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு மாவட்டத் தலைவர் எழுந்து, ``நம்முடைய மன்றத்தில யாரையும் சேர்க்கவும் வேண்டாம் நீக்கவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள்.
ஆனால் மாவட்டத்தில் நிறைய பேர் உங்களுடைய பெயரைப் பயன்படுத்தித் தப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறோம்.
அதனால் மன்றத்தின் பேரு கெட்டுப் போகுது.
இவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்று கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த ரஜினி, ``நீங்கள்தானே மாவட்டத் தலைவர்.
முதலில் உங்களது மாவட்டத்தை நீங்கள்தான் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். முடியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள்" என்றார்.
தப்பு பண்றவங்க யாரா இருந்தாலும் விடக்கூடாது. யார் அதுமாதிரி இருக்காங்கனு சொல்லுங்க. நடவடிக்கை நிச்சயமாக எடுப்போம்” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். அத்தோடு மன்றத்தின் வளர்ச்சி குறித்து பேசியிருக்கிறார்.
நிறையவிஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பிருக்கிறார்கள் நிர்வாகிகள். அதற்கு ரஜினியும் பதிலளித்திருக்கிறார்.
இப்படிப் பல விஷயங்களைப் பரிமாறிக்கொண்டவர் நிறைய விஷயத்தில் திருப்தி இருக்கிறது. ஆனால், எனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் அவ்வளவாகத் திருப்தி இல்லை.
ஏமாற்றம்தான் எனச் சொல்லி மறுபடியும் பழைய கதை சொல்லிவிட்டு நழுவிவிட்டார். மன்ற நிர்வாகிகள், `எப்போது கட்சி ஆரம்பிப்பார்.
கொடி சின்னத்தை எப்போது வெளியிடப்போகிறோம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ரஜினி பேசுவார் என்று எதிர்பார்த்து வந்தோம்.
ஆனால், தலைவர் எதுவுமே சொல்லாமல் கிளம்பிவிட்டார். தலைவரைப் பற்றி எங்களால் கொஞ்சம்கூட புரிஞ்சிக்க முடியவில்லை' என்று ஏமாற்றத்தோடு வெளியேறுவதாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.