அம்மா குடிநீர் மையங்கள் மீண்டும் திறக்கப்படுமா...

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பஸ் நிலையங்களில், மூடப்பட்டுள்ள, 'அம்மா குடிநீர்' விற்பனை மையங்கள் மீண்டும் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பயணியர் மத்தியில் எழுந்துள்ளது.


தமிழக அரசின், சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடி பூண்டியில் தயாராகும், 'அம்மா' மினரல் வாட்டர் பாட்டில்கள், தமிழகத்தின் அனைத்து முக்கிய பஸ் ஸ்டாண்ட்கள், சாலையோர உணவகங்கள், என, 345 ஸ்டால்களில் விற்பனை செய்யப்பட்டது.


போக்குவரத்துகழகங்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், அம்மா குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்தவர்கள், பஸ்களை இயக்கும் பணிக்கு அழைக்கப்பட்டனர்.


தொழிலாளர்கள்பற்றாக்குறையை சமாளிக்க, குடிநீர் விற்பனை நிலையங்களை, ஓய்வு தொழிலாளர்கள் மூலம் இயக்கினர். சேலம் உட்பட பல மாவட்டங்களில், ஓய்வு தொழிலாளர்கள் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானதால், மீண்டும் தொழிலாளர்களை கொண்டு விற்பனை துவக்கப்பட்டது.



ஆயினும், திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலையில், தமிழகம் முழுவதும், 202 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.


தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பஸ்களில் பயணிப்ப வர்கள், அம்மா குடிநீர் பாட்டில்களை வாங்க, விற்பனை நிலையங்களுக்கு செல்கின்றனர். அவை மூடப்பட்டு கிடப்பதால், பிற தனியார் நிறுவன பாட்டில்களை, கூடுதல் விலை கொடுத்து வாங்குகின்றனர்.பல


மாவட்டங்களில், விற்பனை நிலையங்கள் மூடியுள்ளன. 'முக்கிய நகரங்களில், மூடப்பட்டு உள்ள, அம்மா குடிநீர் விற்பனை மையங்களை மீண்டும் திறக்க வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்