மாதனம் என் உலக மகளிர் தினம். இந்த மகளிர் ஏன் கொண்டாடப்படுகிறது

மார்ச் 8 உலக மகளிர் தினம். இந்த மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது நமக்கான உரிமைகளை மட்டுமல்ல பாதுகாப்பினை கூட நாமே போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையை மக்களிடம் விதைத்த அரசாங்கத்தை எதிர்த்து உலகெங்கும் திரண்ட மகளிர் தங்களின் கோரிக்கைகளுக்காக பல வருடங்கள் போராடியதென்கிறது வரலாறு.


ஊர் கூடி கொடியேற்றி மிட்டாய்களைக் கொடுத்து அதன் பிசுபிசுப்பு கரைவதற்குள் மறக்கப்படும் சுதந்திரத்தினத்தைப் போன்றதுதான் இந்த மகளிர் தின கொண்டாட்டமும். வாரம் முழுமையும் சீருடை அணியும் பிள்ளைகள் கடைசி நாளில் கலர் உடையில் வலம் வருவதைப் போன்ற ஒரு நிகழ்வாகத்தான் இந்த ஒருநாள் கொண்டாட்டத்தைப் பார்க்க முடிகிறது.


சாவின் உதடுகள் கொப்பளித்த இரத்தப் புள்ளிகளுக்கு மத்தியில் பெண்கள் சுயம்புவாய் மிளிர்கிறார்கள். அவர்களின் போற்றப்படுறதா என்று யோசிப்பது ஒருபுறம் ஆனால் மறுபுறம் நாடெங்கும் பற்றியெரியும் பாலியல் தீண்டல்களுக்கு தயங்கும் தன் உடலை தானறியாமலே தாரை வார்த்து, பெண்ணின் மேற்சதை வீக்கத்தையும், கீழ் பிளவையும் ருசிக்க எச்சில் ஒழுகும் ரத்தக் காட்டேரிகளாய் மனிதப் பிண்டங்கள் வாழும் போது தப்பிக் கொள்ளத் தெரியாதவளாய் தன் மாண்புகளை அவள் இழக்கிறாள்.


அவளின் சுதந்திரத்தின் அளவு ஞாயிறு திங்களின் மதிய விருந்துக்காக கழுத்தறுபடும் விலங்கின் நிலைதான். மகளிர்தினத்தில் உச்சிக் கோபுரமென அலங்கரிக்கப்பட்டு மறுநாளே மூலைக்கொன்றாய் பிய்த்துப் போடப்படும் பிள்ளைக் கைப்பொம்மையாய் அவளை?! எத்தனை எத்தனையோ அடக்குமுறைகள் தாண்டி பெண்ணின் பாதங்கள் தமக்கான அங்கீகாரத்திற்கான களங்களை கண்டு வருகிறது.


பெண்மைக்குள்ளும் வீரம், வன்மை, கோபம் ஆளும்திறன் உண்டு. பெண்களிடம் இருந்து கரண்டியைப் பிடுங்கிக் கொண்டு 60 புத்தகங்களைக் கொடுங்கள் என்று பேசிய பெரியாரின் மொழிகள் அடுப்பூத மட்டும் பெண் பிறக்கவில்லை என்ற பாரதியின் வரிகள் இவையெல்லாம் அன்று பெண்மையை மீட்டெடுக்க உதவியது.


ஆனால் இன்று அவர்களின் வளர்ச்சி அபரிதம் அவள் மலையைக் கடக்கிறாள், கடலில் மிதக்கிறாள், நிலத்தில் தினம் தினம் தன் சுயத்தை மீட்டெடுக்கப் போராடுகிறாள். வெற்றியென்னும் படிக்கெட்டுகளில் உச்சாணிக் கொம்பில் நின்றாலும் எந்நேரமும் கீழே இழுத்துத் தள்ளப்படும் ஒரு கயிற்றை சமூகத்தின் கரங்களில் கொடுத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.


அப்படிக் கொடுக்கத் தவறிய மறுத்த பெண்கள் ஒழுக்கக் கேடானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் பெண்மை அவள் வெற்றியை வீழ்ச்சியை அடைய அவளின் ஒழுக்கம் தான் இங்கே அலசப்படுகிறது.


அதில் தானாகவே அவள் அடிபட்டு திரும்பிவிடுவாள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நேர்மையான எதிர்ப்பு என்றுமே பெண்களுக்குத் தரப்படுவதில்லை. எனின் அவள் அதை இலகுவாக தன் பாதையில் இருந்து நகர்த்திவிடுவாள். பெரும் சாம்ராஜ்யங்கள் கூட வீழ்த்தப்படுவது துரோகத்தினாலும், வஞ்சகத்தினாலும் தானே. பெண் எனும் சாம்ராஜ்யம் வீழ்த்தப்படுவதும் அப்படிப்பட்ட தீ நாக்குகளால்தான்.


ஒரு பெரிய பத்திரிக்கை வெற்றி பெற்ற பெண்களின் வரிசைப் பட்டியலை வெளியிட்டு கௌரவிக்கிறார்கள். தன் பட்டியலை நிறைக்கும் வெகு பரிச்சயமானவர்களைத் தான் மீண்டும் மீண்டும் திரை விளக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. மாறாக பெரும் பாதிப்பிற்குள்ளான போதும் மீண்டு வந்து தனக்கென களம் காண்பவர்களையும், மாற்றுத் திறனாளியாக பிறந்த போதும் தங்களின் திறமைகளை தானாகவே வெளிப்படுத்தி வெற்றி கண்டவர்களையும். ஏன் அவர்கள் சுயம்பு என்று அடையாளம் காட்டப் படுவதில்லை .


அன்றைய காலத்தில் அரசாங்க ராஜ்ய காரியத்தில் கூட பெண்கள் தனித்துவம் பெற்று விளங்கினார்கள். தங்கள் அரசியல் அறிவை வெளிப்படுத்தினார்கள் மதிக்கப்பட்டார்கள், ஆனால் பின்னாளில் அவளின் ஒளிச்சுடரில் அச்சம் ஏற்பட்டு வீட்டு விவகாரங்களில் கூட அவள் புழக்கடையின் பின் பக்கம் அமைந்திருக்கும் ஒரு கதவின் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டாள்.


பசியைக் கூட வீட்டு ஆண்பிள்ளைகள்தான் முடிவு செய்தார்கள். தீட்டாய் ஒதுக்கப்பட்டாள், கணவன் இறந்த பிறகு வாழத்அ தகுதியில்லை என்று உடன்கட்டை எற்றப்பட்டாள், இரவிக்கை அணிய தடையிருந்தது முலைக்கு வரி விதிக்கப்பட்டது.


அதிகம் படிக்கவைத்தால் கல்யாணச் சந்தையில் அவளைக் கரையேற்றுவது கடினம் என்றெல்லாம் தடைகள். ஒரு பெண் தன் பிறப்பில் இருந்து பிரிவுப்படும்போதே தனி அடையாளம் காண்கிறாள். வளர்ச்சியிலம் உடல் பரிமாணதிரையுலகில் மாற்றதிலும் தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறாள். எங்கோ புதைகுழியில் விழுந்து மீண்டு எழும் திருமணசந்திராயன் பந்தத்தின் ஆணிவேராய் உள்ளே நுழைகிறாள்.


இங்கிலிஷ் வெங்கிலிஷ் என்றொருஅசீபாவின் திரைப்படத்தின் முதற் காட்சியில் வெற்றிகரமான ஒரு குடும்ப பெண்மணி தனக்கான தேநீரை சுவைக்கவும், பத்திரிக்கையில் இரண்டு ஆங்கில எழுத்துக்களை வாசிப்பதற்கும் கூட அவளின் நேரம் களவாடப் பட்டு இருக்கும். ஏடுகட்டி தேநீரின் கசப்பு சுவையோடு தன் வாழ்வின் கசப்பை அவள் விழுங்குவதைப் போன்று காட்சி விரியும். தனக்கான தேவைகளையும், தேடல்களையும் இன்னமும் சரியான தராசில் அவளால் நிறுத்திப்பார்க்க முடியவில்லை அவளின் தராசுகளின் முட்கள் அவளைக் கீறி ரத்தம் சுவைத்துக் கொண்டேதான் இருக்கிறது. தாய்மை தரும் வலியை கடந்து உயிர்தெழும் அவளால், காதல் என்ற ஒற்றை சாத்தானின் வார்த்தையை மறுத்தபோது அமில வீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் தன் சிறகுகளை இழந்து மீண்டும் அக்னிசிறகுகளை விரிக்கிறாள்.


இன்னும் எத்தனையோ பெண்கள் கணக்கில் அடங்காமல் தினம்தினம் கண்ணுக்கு தெரியாத எதிரிகளைக் கடந்து பல அசாதாரண சூழலில் தனித்து நிற்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த 1440 நிமிடங்கள் திருப்தியைக் கொடுக்கும் எனில் இனிய மகளா தின வாழ்த்துக்களை நாமும் தெரிவித்துக் கொள்ளலாம்.பண் எனும் இரண்டு எழுத்துக்குள் நுழைந்து தாய்மை என்ற மூன்றெழுத்தாய் அவளின் பயணம் கடின மலைகளையும் மேடுகளையும் தாண்டிவரும் ஆனால் தெளிந்த நீரைப் போல தன்னை அண்டியவரின் தாகத்தை தணிக்கும் நீராகிறாள்.



  • சூடிக் கொடுத்த ஆண்டாள்,

  • வீரவாள் ஏந்தி வெற்றி முழக்கமிட்ட ஜான்சிராணி

  • நெல்லிக்கனி பெற்று அதனினும் சுவையான ஆத்திச்சூடியளித்த அவ்வையார்,

  • பரமசிவனின் கைலாயத்தை பக்தியால் அடைந்த காரைக்கால் அம்மையாயர்,

  • அரசியலில் வெற்றி கொடி நாட்டிய இந்திரா, ஜெயலலிதா,

  • மருத்துவத்தில் முதன்மையான முத்துலட்சுமி ரெட்டி,

  • நிலவைகாட்டி சோறூட்டிய அன்னையர்களின் கனவை நனவாக்க நிலவு நோக்கி பயணமான கல்பனாசாவ்லா,

  • திரையுலகில் தனக்கென இடம் ஒதுக்கி நட்சத்திரமாய் மின்னிய சாவித்திரி

  • சந்திராயன் 2ற்காக இந்திய வானியல் சங்க விருதை பெற்ற வனிதா

  • அசீபாவின் வழக்கிற்காக மிரட்டல்கள் பலதையும் தைரியமாக கடந்த வழக்கறிஞர் தீபிகா

  • கால்களால் தேர்வெழுதி வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி தேவிகா

  • 2018ம் ஆண்டிற்கான மனித உரிமை ஹீரோ விருது பெற்ற சமுக ஆர்வலர் உஷா ராமநாதன்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்