கொரோனா வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - டிஜிபி திரிபாதி

கொரோனா குறித்த தேவையற்ற வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதற்கு இது தான் மருந்து எனவும், இந்த ஊரில் இவருக்கு கொரோனா தொற்றும் எனவும் சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகளை பலர் பரப்பி வருகின்றனர்.


செய்தி தொலைக்காட்சிகளின் லோகோவை பயன்படுத்தி பொய் செய்திகளை சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பும் நபரகளும் உள்ளனர்.


இவர்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.