வங்கிகளின் நிர்வாகத் தலைவர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை சந்தித்து பேசுகிறார்.

10 பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம்.. நாளை முக்கிய ஆலோசனை.


வங்கிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் இணைக்கப்படவுள்ள வங்கிகளின் நிர்வாகத் தலைவர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை சந்தித்து பேசுகிறார்.


வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்த சந்திப்பு நடைபெறுகிறது.


வங்கிகள் இணைப்பு நடவடிக்கையின்போது வாடிக்கையாளர்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதை குறைப்பது, பொருளாதாரத்தின் ஆக்கப்பூர்வ துறைகளுக்கான கடன் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது உள்பட பல்வேறு விஷயங்கள் அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுமென கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு