வெறுப்பு பேச்சு பேசியது யார்.. உலகமே டெல்லி வன்முறையை பேசுகின்றன.. லோக்சபாவில் டிஆர் பாலு ஆவேசம்.

டெல்லி வன்முறைகள் குறித்து லோக்சபாவில் டி.ஆர்.பாலு எம்.பி. இன்று ஆவேசமாக பேசினார். அப்போது அவர், வன்முறைகளை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.


டெல்லியில் கடந்த பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் நடந்த சிஏஏ வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஏராளமான மக்களின் வாழ்வாதாரங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டன. வீடுகள், கட்டிடங்கள், கடைகள், தீ வைத்து எரிக்கப்பட்டன.


மிகப்பெரிய கலவரத்தில் குறிப்பிட்ட சமூக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபா அவையில் திமுக எம்பி டிஆர்பாலு சரமாரியாக கேள்விகளை எழுப்பி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "டெல்லியின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து இந்தியாவில் மட்டும் விவாதிக்கப்படவில்லை. இங்கிலாந்து, ஈரான், துருக்கி, இந்தோனேசியா நாடாளுமன்றங்களில் கூட விவாதிக்கப்படுகிறது.


அமைதி போராட்டம்
டெல்லியின் ஷாஹீன்பாக் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக அமைதியான முறையில் இன்று வரை 88 வது நாளாக தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை எந்த சிறு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் அங்கு இல்லை. ஏனெனில் அங்கு சிறுபான்மையினர் அவர்களுக்காக அங்கு அமைதியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


பாஜக தான் காரணம்
ஆனால் வடகிழக்கு டெல்லியில் என்ன நடந்தது. 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் ஷஹீன்பாக்கில் சிஏஏவுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.


ஆனால் வடகிழக்கு டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக மட்டும் போராட்டம் நடக்கவில்லை. சிஏஏவுக்கு ஆதரவாக ஆளும் கடசியான பாஜகவினரின் ஆதரவுடன் போராட்டம் நடந்தது.


இதனால் தான் பிரச்சனை ஏற்பட்டது. அவர்கள் போராட வந்த பிறகே நிலைமை மோசமானது. 53 பேரின் உயிர் போய்விட்டது. 500 பேர் இன்று வரை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


டெல்லி போலீஸ்
டெல்லி போலீசார் கலவரத்தின் போது எந்த செயலும் செய்யாமல் திக்கற்று போய் நின்றனர். எந்த கலவரத்தையும் அடக்க கூடியவர்கள் டெல்லி போலீசார். ஆனால் டெல்லி கலவரத்தின் போது அவர்களுக்கு என்ன ஏற்பட்டது. அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கிலாந்து, ஈரான் உள்பட மற்ற நாடுகள் எல்லாம் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்கின்றன.


வன்முறைக்கு என்ன காரணம்
ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் உணவகம், அறைகள் உள்பட போலீசார் அனைத்து இடங்களிலும் சென்று தாக்கினார்கள் நடத்தினர்.


ஆனால்ஜாமியா போராட்டத்திற்கு காரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஏபிவிபி மாணவர்கள் வன்முறை நடத்திய போது போலீசார் அமைதியாக இருந்தனர்.


எனவே போலீசாரின் கைகள் கட்டப்பட்டது ஏன்? டெல்லி வன்முறைக்கு என்ன காரணம், யார் வெறுப்பு பேச்சை பேசினார்கள்? " இவ்வாறு டிஆர் பாலு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.


அத்துடன் டெல்லி வன்முறையில் ஏற்பட்ட சேதங்களை பட்டியலிட்டவர் அந்த கொடூர வன்முறையில் ஈடுபட்டவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும் என்று டிஆரபாலு லோக்சபாவில் வலியுறுத்தினார்.


அவர் பாஜகவை குற்றம்சாட்டி பேசிய போதெல்லாம் பாஜக எம்பிக்கள் ஆட்சேபனை தெரிவித்து கூச்சலிட்டத்தால் சலசலப்பு ஏற்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு