மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் கூடுதல் விலைக்கு மாத்திரைகளை வழங்கிய மருந்தகங்களுக்கு சீல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மருத்துவரின் மருந்து  சீட்டு இல்லாமல்  கூடுதல் விலைக்கு  காய்ச்சல் மாத்திரைகளை வழங்கிய மருந்தகங்களை அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.


திருச்செந்தூர் மற்றும் உடன்குடியில் உள்ள மருந்தகங்களில் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது.  இதனையடுத்து அப்பகுதிகளில் உள்ள மருந்தகங்களில்  கோட்டாச்சியர்  தனப்பிரியா, மற்றும் வருவாய்துறையினர் நேற்று திடீர்  ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது மருத்துவர்களின்  மருந்துச் சீட்டு இல்லாமல் காய்ச்சல் மற்றும் இருமலுக்கான  மாத்திரைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனை அடுத்து மருந்துகளை விற்ற அந்த 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். பின்னர்  பொதுமக்களின் நலன்கருதி அந்த மருந்தகங்கள் திறக்கப்பட்டது.