பத்திரிகையாளர்கள் சிந்தும் ரத்தம் தமிழகத்திற்கு கேடானது;சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்..

நேற்று சிவகாசி - இன்று சென்னை* புளியந்தோப்பு காவல் நிலையம் முன்பு  - தொடரும் தாக்குதல்கள்.
மிரட்டப்பட்ட விண் தொலைக்காட்சி செய்திக்குழுவினர் .
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்.


இன்று 04-03-2020 புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை புளியந்தோப்பில், பொது சுகாதாரம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற வின் டி.வி., நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர்களை மிரட்டிய சமுக விரோத கும்பல் ஒளிப்பதிவு கருவியை அபகரித்து காட்சிப்படுத்திய ஒளிப்பதிவை அழிக்கச் செய்துள்ளனர். 
இது தொடர்பாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பத்திரிகையாளர்களின் வாகனத்தை புளியந்தோப்பு காவல் நிலையம் அருகிலேயே  கார் கண்ணாடியை  உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.இந்த தாக்குதல் மிரட்டல் சம்பவத்தைப் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.


விண் தொலைக்காட்சி செய்திக் குழுவினரை மிரட்டிய- தாக்குதல் நடத்திய சமுக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் சென்னை மாநகர காவல்துறையை வலியுறுத்தியும்.


சிவகாசியில் செய்தியாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டம் என்ற செய்தியை பகிரும் நேரத்தில் இன்னொரு தாக்குதல் என்பது தமிழகத்தில் பத்திரிகையாளர்கள்பாதுகாப்பை*வெளிச்சம் போட்டு காட்டும் அவலம்.*
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்  என்ற முழக்கங்களுடன்
இன்று 04-03-2020 மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்பாட்டம்* நடைபெற்றது.


பத்திரிகையாளர்கள் சிந்தும் ரத்தம் தமிழகத்திற்கு கேடானது.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்