வைரசை பரப்பியதாக பாதிக்கப்பட்ட நபர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு

மத்தியப் பிரதேசத்தில் துபாயிலிருந்து திரும்பிய நபர் கொரோனா பரிசோதனையை தவிர்த்த நிலையில், அவர் மூலமாக அவரது குடும்பத்தினர் இருவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது.


அவரது கடையில் பணிபுரியும் 8 பேருக்கும் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 16ம் தேதி துபாயிலிருந்து நாடு திரும்பிய ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த நபர், கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளாமல், தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார்.


இந்நிலையில் அந்த நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதோடு, அவர் மூலமாக அவரது குடும்பத்தை சேர்ந்த இரு பெண்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.


அவரது கடையில் பணிபுரியும் 22 பேரை பரிசோதித்ததில் 8 பேருக்கு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.