திருச்சி அருகே புத்தூர் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்...

தமிழகத்தில் கோடை வெயில் துவங்கியதை முன்னிட்டு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திருச்சி புத்தூர் பகுதியில் திறக்கப்பட்டது.


கோடை வெயிலால் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அனல் காற்று வீசுகின்றது. இதனால் பொதுமக்கள் மார்ச் முதல் வாரத்திலேயே வெயிலின் தாக்கத்தை அதிகமாக உணர்கிறார்கள்.


பொதுமக்கள் நலன் கருதி தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பாக திருச்சி புத்தூர் பகுதியில் அமைத்து உள்ளார்கள்.


சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் மண்பானையில் தண்ணீர் வைத்து  அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறார்கள்.