எங்கள் நாட்டிற்குள் வரக்கூடாது.. லிஸ்டில் இந்தியாவும் இருக்கு.. சவுதி அரேபியா அதிரடி முடிவு

சவுதி: இந்தியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்கள், சவுதி அரேபியாவிற்குள் வருவதற்கு, அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பீதிதான் இதற்கு காரணம்.


கடந்த 14 நாட்களில், ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், சீனா, சீன தைபே, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், தென் கொரியா லெபனான், மக்காவோ, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, சிரியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், வியட்நாம், யேமன் ஆகிய நாடுகளில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் சவுதிக்குள் நுழைய முடியாது.


இதேபோல, விமான சிப்பந்திகளும், சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சவுதி அரேபியா நாட்டின் குடிமக்களுக்கு பொருந்தாது. வளைகுடா நாடுகள் வளைகுடா கூட்டமைப்பு (கல்ப்) நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி தேசிய அடையாள அட்டையுடன் சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.


அவர்கள் கண்டிப்பாக தங்கள் பாஸ்போர்ட்டுடன் வந்தாக வேண்டும். சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், மீண்டும் தாய்நாடு திரும்பி வரும்போது, தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு வந்து கொள்ளலாம்.


அவர்களுக்கு பாஸ்போர்ட் விதிமுறை பொருந்தாது. இந்தியர்கள் ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், மெயின்லேண்ட் சீனா, சீன தைபே, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், கொரியா (பிரதி), லெபனான், மக்காவோ, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, சிரியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் அல்லது யேமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா விசா எடுத்திருந்தாலும், சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


புனித யாத்திரை உம்ராவிற்காக வருவோர் அல்லது நபிகள் நாயகம் நினைவிடம் வருகை தரும் ஆன்மீக பயணிகள் சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் வலைத்தளத்தின் மூலம் பெறப்பட்ட ஹஜ் மற்றும் உம்ரா அனுமதியுடன் வரக்கூடிய, பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டினருக்கு மட்டும் இந்த தடை பொருந்தாது. தேவைப்பட்டால் விமான ஊழியர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.


சவுதியிலும் பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை ஈர்க்கும் இஸ்லாமிய புனித தலங்களின் தாயகம் சவுதி அரேபியா. எனவே அங்கு முன்னெச்சரிக்கை மிக அவசியமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கொரோனா வைரஸ் தொற்று சவுதியிலும் பரவியுள்ளது. ஈரானுக்குச் சென்று திரும்பிய ஒரு சவுதி நபருக்கு, இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று சவுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்