கொரோனாவால் பாதிப்பே இல்லை என்று கூறும் அரசு... சுட்டுக்கொன்றதாக கூறும் உளவு அமைப்புகள்...! என்ன நடக்கிறது வடகொரியாவில்.....

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையில், தங்களது நாட்டில் ஒரு பாதிப்பும் இல்லை என்று வடகொரியா கூறியுள்ளது.


சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து வைரஸ் ஒன்று மனிதர்களுக்கு பரவியது. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த அந்த வைரஸுக்கு கோவிட் 19 என்று பெயரிடப்பட்டது.


சீனாவில் அதிவேகமாக இந்த வைரஸ் பரவிய நிலையில், உலகம் எச்சரிக்கை ஆனது. எனினும், இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாததால் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் பணி சிக்கலானது என்பதால், வைரஸ் சீனாவைத்தாண்டி வெளிநாடுகளுக்கும் பரவத்தொடங்கியது.


தற்போது வரை உலகம் முழுவதும் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்பொது வரை, சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.


சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறைவதாக கூறப்பட்ட நிலையில், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் பாதிப்பு தொடர்கிறது. இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவை விட இத்தாலியில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. சீனாவை ஒட்டியுள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், வட கொரியா இதுவரை தங்கள் நாட்டில் கொரோனா இல்லவே இல்லை என்று கூறுகிறது.


கொரோனா பாதிப்பு - மார்ச் 21-ன் படி டாப் 10 இடத்தில் உள்ள நாடுகள்


வடகொரியாவில் ஊடகங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்குள்ள சூழல்களை அரசு ஊடகங்கள் மட்டுமே வெளியிட்டு வருகின்றன.


ஆளும் தொழிலாளர் கட்சியின் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி, சீனாவில் வைரஸ் தாக்குதல் தொடங்கியபோதே, வடகொரியா தனது எல்லைகளை மூடியது. சீனா உடனான வணிக போக்குவரத்தையும் நிறுத்தியது.


நாட்டில் உள்ள வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு தூதர்கள், அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். 30 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உலகத்தில் இருந்தே வடகொரியா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டது. இதனாலே, வட கொரியாவில் ஒரு கொரோனா பாதிப்பு கூட கண்டறியப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.


எனினும், நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை தலைநகரில் கட்டுவதற்காக அதிபர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை நம்ப முடியவில்லை என்று முன்னாள் சிஐஏ ஆய்வாளர் ஜாங் எச் பாக் கூறியுள்ளார்.


வடகொரிய விவகாரங்களை கவனித்து வந்த அவர் கூறுகையில், சீனா மற்றும் தென்கொரியா உடன் நெருக்கமான எல்லைகளைக் கொண்ட வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்றால் அது ஏற்க இயலாதது. இந்த விஷயத்தில் வட கொரியா உண்மையை மறைக்கிறது என்று தெரிவிக்கிறார்.


தென்கொரிய பத்திரிகைகளும் வடகொரியாவில் 400 பேர் வரை கொரோனா தாக்கி இறந்திருக்கலாம் என்று கூறுகின்றன. சில பத்திரிகைகள், கொரோனா பாதித்தவர்களை கிம் ஜாங் அன், சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதாகவும் கூறுகின்றன.


அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் உளவு அமைப்புகளும் இதனை உறுதி செய்துள்ளதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்