தனக்கே பிறப்புச் சான்று இல்லாதபோது ஏழை மக்களிடம் எப்படி இருக்கும் - தெலுங்கானா முதலமைச்சர்.
தனக்கே பிறப்புச் சான்று இல்லாதபோது ஏழை எளிய மக்களிடம் பிறப்புச் சான்று எப்படி இருக்கும் எனத் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வினவியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், குடியுரிமைச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றால், உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்புக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
580 ஏக்கர் நிலம், அரண்மனை போன்ற வீடு ஆகியவற்றைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த தனக்கே பிறப்புச் சான்று இல்லை எனத் தெரிவித்தார். இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர், ஏழை எளியோர் எப்படிப் பிறப்புச் சான்றைக் கொண்டிருப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
முற்காலத்தில் பிள்ளைகளுக்கு எழுதப்பட்ட ஜாதகக் குறிப்புகளே அவர்களின் பிறந்த நாளைக் காட்டும் சான்றாக ஏற்கப்பட்டதாகத் தெரிவித்தார்.