அமெரிக்க வீரர் தான் கொரோனாவை பரப்பினார்: சீனா மீண்டும் குற்றச்சாட்டு

'கொரோனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள வனவிலங்குகளின் இறைச்சி விற்கும் சந்தையில் இருந்துதான் பரவியது' என, சீனாவின் மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தது.


ஆனால், 'அமெரிக்க ராணுவ வீரர்கள் தான் வூஹானில் கொரோனா வைரசை பரப்பினர்' என, சீன சுகாதாரத் துறை அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியது.


இதையடுத்து, அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், இந்த வைரசை 'சீன வைரஸ்' எனக் குறிப்பிட்டார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.


'கொரோனாவைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது சீனாவில் தானே தவிர, வைரஸ் உருவானது சீனாவில்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என, சீன அரசு தெரிவித்தது.


இந்நிலையில் சீன அரசின் ஆங்கில நாளிதழான 'குளோபல் டைம்ஸ்' இந்த வைரஸ் அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவானது எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.


சைக்கிள் பந்தைய வீரர்


அந்தக் கட்டுரையை எழுதிய ஜார்ஜ் வெப், 'கொரோனா வைரஸ் அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்., மாதம் ஹூபே மாகாணத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வூஹான் நகரில் அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர் ஒருவரால் பரப்பப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.


வைரசுக்கும் சைக்கிள் பந்தய வீரருக்கும் என்ன தொடர்பு என்பதையோ, பரப்பியதற்கான ஆதாரத்தையோ அந்தச் செய்தியில் விளக்கவில்லை. இதனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீனா தெரிவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது.


இருந்தும், சீனாவில் இருந்து தான், இந்த வைரஸ் உருவானது என்பதற்கான ஆதாரத்தை இதுவரை அமெரிக்கா காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)