கொளுத்திப்போட்ட ரஜினி!' - “மீன் குழம்பு சட்டியில் சர்க்கரைப் பொங்கல்” - 'பாபா' கதை சொல்லி ரசிகர்களுக்கு 'பெப்பே காட்டிய ரஜினி

பாபா படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருந்த சுஜாதா தோன்றும் காட்சி ஒன்றில், 12.3 என தேதியைக் குறிப்பிட்ட காலண்டர் இடம்பெற்றிருக்கும். அந்தக் காட்சியின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் சமூக வலைதளங்களை நேற்றிரவு முதலே ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. இந்தநாள் அந்த நாள்தான் என்று ரசிகர்கள் பலரின் மகிழ்ச்சிப் பதிவுகளைப் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பார்க்க முடிந்தது.


எதிர்பார்ப்புகள் மிகுந்த இந்தச் சூழலில் சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டல் முன்பு ரசிகர்கள் காலை முதலே குவியத் தொடங்கினர். லீலா பேலஸ் ஹோட்டலில் உள்ள ஒரு ஹாலில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஹோட்டலுக்கு வெளியிலும் உள்ளேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.போலீஸாருடன் இணைந்து தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் சார்பிலும் பாதுகாப்புக்காக ஆட்கள் இருந்தார்கள். ஹோட்டலுக்குள் நுழையும்போது உரிய அடையாள அட்டை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தே உள்ளே அனுப்பினர். அதேபோல், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்ச்சிக்கு வரும் ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையையும் கண்காணித்த பின்னரே ஹாலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.


ஹோட்டல் கேட் தவிர, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற ஹாலின் வாசலிலும் இருவர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அந்த அறைக்கு வெளியில் பெயர், போன் நம்பர் மற்றும் எந்த ஊடகம் என்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், அறை வாசலிலும் அடையாள அட்டையை பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.


ஒரே ஒருவர் நின்று பேசும்படியான போடியத்துடன் சின்ன மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்க, அதற்கு முன்னால் இருபுறமும் வரிசையாக சேர்கள் அடுக்கப்பட்டிருந்தன. தேசிய ஊடகங்கள் முதல் தமிழக ஊடகங்கள் வரை காலை 9 மணியிலிருந்தே வரத் தொடங்கியிருந்தன.


காலை சரியாக 10.30 மணிக்கு மேடையேறிய ரஜினி, எனது அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி' என்று கூறி பேச்சைத் தொடங்கினார். தனது டிரேட் மார்ட் வெள்ளை நிற உடையில், ரஜினி அரங்கத்துக்குள் நுழைய அறை வாசலில் `தலைவா.... தலைவா' கோஷம் எதிரொலித்தது.


கட்சி, கொடி அறிவிப்பு வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், பேசத் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே எதற்காக இந்தச் செய்தியாளர் சந்திப்பு என்பதை ரஜினி தெளிவுபடுத்திவிட்டார். இதுகுறித்து பேசிய ரஜினி, “கடந்த 5-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் எனக்கு தனிப்பட்ட வருத்தம் இருப்பதாக நான் சொன்னேன்.


ஆனால், அதைவைத்து பல்வேறு கருத்துகள் யூகங்கள் அடிப்படையில் பல செய்திகள் வெளியாகின. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே இந்தச் செய்தியாளர் சந்திப்பு.


அதில் பல அடிப்படையற்றவை. அந்தச் சந்திப்பு எதற்காக நடத்தப்பட்டது? அரசியலுக்கு வருவது குறித்து எனது கண்ணோட்டம் என்ன? இப்படி பல விஷயங்கள் குறித்து மக்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுத்தவுமே இந்தச் செய்தியாளர் சந்திப்பு” என்ற முன்னுரையுடனே பேச்சைத் தொடங்கினார் ரஜினி.


முதலாவதாக ரஜினி குறிப்பிட்டது, மாநிலம் தொடங்கி ஊராட்சிகள் வரை இருக்கும் 50,000-த்துக்கும் மேற்பட்ட கட்சிப் பதவிகளில் ஆட்சியைப் பிடித்தால், அதில் தேவையானவை தவிர மற்ற பதவிகள் கலைக்கப்படும். இரண்டாவது, தேர்தலில் 50 வயதுக்குக் கீழ் உள்ள ஓரளவு படித்தவர்கள், நேர்மையான தொழில் செய்வோர், அவர்கள் வாழும் பகுதியில் கண்ணியமானவர்கள் எனப் பெயரெடுத்தவர்களைத் தேர்வு செய்து, 60-லிருந்து 65 சதவிகிதம் அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.


மீதமுள்ள 35 முதல் 40 சதவிகிதத்தில் வேறு கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் இவர்கள் விருப்பப்பட்டு நமது இயக்கத்தில் சேர விரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்” என்றார் ரஜினிஇந்த இரண்டு கருத்துகளும் தனது ரசிகர், மன்ற நிர்வாகிகள் தொடங்கி நலம்விரும்பிகள் பலராலும் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தான் மூன்றாவதாக சொன்னதைப் பெரும்பாலும் அனைத்து தரப்பினருமே விரும்பவில்லை என்றார் ரஜினி. ஆட்சித் தலைமை; கட்சித் தலைமை வேறுவேறு' என்று தாம் முடிவு செய்துவிட்டதாகக் கூறிய அந்தக் கருத்துக்குத் தான் பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியதாகச் சொன்னார் ரஜினி.


அரசியலில் மாற்றம் என்பது அரசியல் செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்' என்பதே என்று கூறிய ரஜினி, இந்த விவகாரத்தில் தான் தெளிவாக இருப்பதாகக் கூறினார். தான் இந்த முடிவுக்கு வரக் காரணமாக ரஜினி கூறுவது. கட்சிக்கு வலுவான தலைமை இருக்கும்நிலையில், ஆட்சியின்போது செய்யும் தவறுகளை எதிர்க்கட்சிபோல் செயல்பட்டு தட்டிக்கேட்க முடியும். தப்பு செய்தவர்களைத் தூக்கி எறியவும் முடியும்” என்பதைத்தான். என்றும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. அதைப்பற்றி நான் கனவில் கூட நினைத்ததில்லை' என்று சொன்ன ரஜினி, அதுதொடர்பாக அன்று தான் பேசியதை குறும்படமாகவும் போட்டுக் காண்பித்தார்.


இடையில் அந்தக் குறும்படம் போட சிறிது தாமதம் ஏற்பட்ட நிலையில், ஏய்.. என்னாச்சு?' என்று லேசாக உணர்ச்சிவசப்பட்டார் ரஜினி. ஆட்சி மாற்றம் ஏற்பட எழுச்சி ஏற்பட வேண்டும். எழுச்சி ஏற்படுவதை நான் பார்க்கிறேன். அப்போது வருகிறேன் அரசியலுக்கு...' என்று கூறியதுடன் செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்த்துவிட்டார் ரஜினி. அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்; இப்ப இல்லன்னா... எப்பவும் இல்லை ...' என்பதை முழக்கமாகவே முன்னெடுக்கப்போவதாக ரஜினி இறுதியாகக் குறிப்பிட்டார். வாழ்க தமிழ் மக்கள்; வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்' என்று கூறி உரையை முடித்த ரஜினி, உடனே அங்கிருந்து கிளம்பினார்.


எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இரண்டு ஜாம்பவான்களை எதிர்த்து அரசியலுக்கு வரப்போகிறோம்.அதிசயம், அற்புதம்', அதிருப்தி' என அவர் பேசிய பல்வேறு விஷயங்கள் விவாதத்தை ஏற்படுத்தின. இந்தநிலையில், இன்று ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போகும் தேதியை அறிவிக்கப்போகிறார் என அரசியல்வாதிகள் முதல் ரசிகர்கள் வரை பெரிதும்எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இரண்டு ஜாம்பவான்களை எதிர்த்து அரசியலுக்கு வரப்போகிறோம்.


கொளுத்திப்போட்ட ரஜினி!' - கொந்தளிக்கும் அ.தி.மு.க, தி.மு.க ரஜினியின் இந்த அறிவிப்புகள் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என அங்கு வந்திருந்தவர்களுடன் பேச்சுக்கொடுத்தோம். கோவை மாவட்டத்திலிருந்து வந்திருந்த ஒரு ரசிகர், மாவட்டச் செயலாளர்களுடன் தலைவர் ஆலோசனை நடத்தப்போறார்னு செய்தி வந்ததுமே நாங்கள்லாம் உற்சாகமாகிட்டோம்.


ஏன்னா தலைவர் எப்போ கட்சிப் பேரை அறிவிப்பாரு, கொடியை அறிமுகப்படுத்துவாருன்னு 2017 டிசம்பர்ல அவர் அறிவிச்ச நாள்ல இருந்தே நாங்க காத்துட்டு இருந்தோம். அதனால், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு என்ற அறிவிப்பு வெளியானதுமே மன்றமானது கட்சியாக அடுத்த பரிணாமம் எடுக்கும் என்று சந்தோஷப்பட்டோம்.


ஆனா, மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்கு அப்புறமும் அது நடக்கல.அறைக்கு வெளியே ரசிகர்கள் கூட்டம் இப்படியிருக்கும்போது திடீர்னு தலைவர் செய்தியாளர்களைச் சந்திக்கப்போறார்னு தகவல் வந்ததும், கட்சிப் பேரு, கொடி அறிமுகத்துக்குக்காகத்தான் இருக்கும்னு நெனைச்சு வந்தோம். ஆனா, அதைப்பத்தி தலைவர் எதுவும் சொல்லாதது சின்ன வருத்தம்தான்.


தேர்தலுக்கு இன்னும் ஒருவருஷம் இருக்கு. அதனால தலைவர் உரிய நேரத்துல சரியான முடிவெடுப்பார்னு நம்புறோம்” என்றார்.மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவரோ, இரட்டைத் தலைமை என்கிற நிலைப்பாட்டில் இருந்து ரஜினி இறங்கி வருவார் என்றார். "தலைவருடைய முகத்துக்காகத்தான் ரசிகர்கள், மக்கள் ஓட்டு போடுவார்கள். அப்படியிருக்கும்போது, அவர் முதலமைச்சராக மாட்டேன் என்று சொல்வது பின்னடைவை ஏற்படுத்தும். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்கிற நிலைப்பாட்டில் இருந்து தலைவர் நிச்சயம் இறங்கி வருவாரு.


ஏற்கெனவே, நாம் இமயமலை போறேன். இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொன்ன தலைவர். அதிலிருந்து இறங்கிவந்து மீண்டும் திரைப்படங்கள்ல நடிக்கலையா?' என்றார். இரட்டைத் தலைமை என்ற தனது கருத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியதாக ரஜினி, பேசும்போதே குறிப்பிட்டார். அதுகுறித்து தெளிவான விளக்கம் கொடுப்பதற்காகவே இன்று ஊடகங்களிடம் பேசுவதாகவும் அவர் கூறினார். ஆனால், அவரது இரட்டைத் தலைமை என்ற ஐடியாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள் என்பதே அவர்களிடம் பேசியதிலிருந்து தெரிந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்