குரட்டை விட்டால் கொரோனா வருமா.. டாக்டர் என்ன சொல்கிறார்..

கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட பெரும்பாலான  நோயாளிகள் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி பலியாவதாக கூறப்படும் நிலையில், சளித்தொல்லையால் குறட்டை விடும் நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று விரைவாக பரவ வாய்ப்பு உள்ளதா ? என்பது குறித்து  நுரையீரல் சிறப்பு மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.


உலக அளவில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அந்தவகையில் சளித்தொல்லை மற்றும் நுரையீரல் பலவீனமானவர்களுக்கு தான் குறட்டை வரும் என்றும் அத்தகைய நபர்களை கொரோனா எளிதாக தொற்றிக்கொள்ளும் என்பது போன்ற தகவல்களும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.


இது தொடர்பாக நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமன் அளித்துள்ள தகவல், குறட்டைவிடுபவர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது,


குறட்டைக்கும் கொரோனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குறட்டை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று வரும் என்பதெல்லாம் வதந்தி என்றும் தெரிவித்தார்


குறட்டை என்பது சுவாசப்பாதை குறுகலாவதால் ஏற்படும். சிலருக்கு சளித்தொல்லையினால் குறட்டை ஏற்படும், பெரும்பாலான நபர்களுக்கு, சிலீப் அமினியா என்ற நோயால் குறட்டை வரும்.


கொரோனாவுக்கும் குறட்டைக்கும் நேரடி தொடர்பு ஏதும் இல்லை என்றும் உறுதியாக தெரிவித்தார்


இன்றைய தேதியில் தகவல் தொடர்புக்கு முக்கிய செயலியாக இருக்கின்ற வாட்ஸ் அப்பில் இது போன்ற வதந்திகளும் வருவதால் அதனை பயன்படுத்துவோர் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்..!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்