ஊரடங்கு: எளியமுறையில் நடைபெற்ற திருமணங்கள்!

நடைபெற்ற திருமணங்கள்!
வழக்கறிஞராக பணியாற்றி வரும் தான் சட்டத்தை மதிப்பதாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென 15 பேருக்கும் குறைவான நபர்களுடன் தனது திருமணத்தை நடத்தியதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


144 தடை உத்தரவை மதித்து தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொண்ட திருமணங்கள் நடைபெற்றன.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் உமேஸ்வரன் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். உப்பிடமங்கலம் கீழ்பாகம் சாலைப்பட்டியை சேர்ந்தவர் திவ்யா இவர்கள் இருவரின் திருமணம் இன்று மணவாசி அடுத்த கோரகுத்தி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் நடைபெற்றது.


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய-மாநில அரசுகள் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை மதித்து இன்று நடைபெற்ற இவர்களது திருமணத்தில் புதுமண தம்பதிகளின் இருவீட்டை சேர்ந்த வெறும் 12 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.


இதுபற்றி புது மாப்பிள்ளையான வழக்கறிஞர் உமேஸ்வரன் கூறுகையில், திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து இருக்கிறோம். மேலும், எனது திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்பதாலும், அரசு விதித்த விதி முறையின்படி, திருமணம் போன்ற விசேஷங்களில் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென கூறியிருந்தது.


இந்நிலையில், வழக்கறிஞராக பணியாற்றி வரும் தான் சட்டத்தை மதிப்பதாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென 15 பேருக்கும் குறைவான நபர்களுடன் தனது திருமணத்தை நடத்தியதாக தெரிவித்தார். மேலும் நோய்த்தடுப்பு முறைகளை முறையாக பின்பற்றி இந்த திருமணம் நடைபெற்றதாகவும் கூறினார்.