கொரோனோவால் எங்களுக்கு ஏதாவது ஆகி இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திக்கிறது: துரைமுருகன் டென்ஷன்.. சட்டசபையில் சிரிப்பு

"ஒன்னும் இல்லை.. ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டு எங்களை காலி பண்ண பார்க்கறீங்களா? ஏதாவது ஒன்னு நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திக்கிறது? பயத்தால் நாங்கள் கர்சீப்பில் வாயை பொத்தி கொள்கிறோம்.. இருமுவதற்கே பயமா இருக்கு.. எல்லாருக்கும் மாஸ்க் குடுங்க" என்று துரைமுருகன் தெரிவிக்க.. "70 வயசுக்கு மேல இருக்கிறவங்களுக்குதான் வேகமாக பரவும்.. அதனால்தான் நீங்க பயப்படறீங்கன்னு நினைக்கிறேன்" என்று எடப்பாடியார் கிண்டல் செய்ய.. சட்டசபையே இன்று அதிர சிரித்தது!


தமிழக சட்டமன்றத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடந்தன... அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் தந்து கொண்டிருந்தார். "யாரும் பயப்பட வேண்டாம், இதுவரை யாருக்கும் தொற்று இல்லை" என்று நம்பிக்கை தந்து பேசினார். உடனே துரைமுருகன் எழுந்து, "பயப்பட வேண்டாம், பயப்பட வேணாம்னு சொல்றீங்க...


. தமிழ்நாட்டில் ஒன்னும் இல்லைன்னும் பேசறீங்க.. ஆனா போனை எடுத்தாலே இருமல் சத்தம் கேட்குது... இங்கு சட்டசபைக்கு வந்தால், வாசலிலேயே சுகாதார பெண் பணியாளர்களை நிறுத்தி கிருமி நாசினி தந்து கைகளை சுத்தம் செய்ய சொல்றீங்க..


ஆனால் சட்டசபையில் யாருக்குமே மாஸ்க் இல்லை.. எந்த முன்னெச்சரிக்கையும் இல்லை.. ஒன்னும் இல்லைஒன்னும் இல்லைன்னு சொல்றீங்க? எங்களை காலி செய்ய பார்க்கறீங்களா? ஏதாவது ஒன்னு நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திக்கிறது? பயத்தால் நாங்கள் கர்சீப்பை வாயில் பொத்தி கொள்கிறோம்.. இருமுவதற்கே பயமாக இருக்கு.. எல்லாருக்கும் மாஸ்க் குடுங்க என்று கிண்டலாக பேசி முடித்தார். துரைமுருகன் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பேசி முடிக்கும்வரை உறுப்பினர்கள் சிரித்து கொண்டே இருந்தனர்.


இதற்கு பிறகு முதல்வர் எழுந்தார்.. துரைமுருகனுக்கு பதிலளிக்கும்போது, "உறுப்பினருக்கு இப்டியெல்லாம் பயம் இருக்ககூடாது என்பதற்காகத்தான் அமைச்சர் சிறப்பாக பேசி இருக்கிறார்.. அதனால் நீங்கள் அச்சப்பட அவசியம் இல்லை .. அது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் வேகமாக பரவும்.. அதனால்தான் நீங்கள் பயப்படறீங்கன்னு நினைக்கிறேன்... வயசாயிட்டாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை" என்று கிண்டல் செய்த முதல்வர், அனைவருக்குமே முன்னெச்சரிக்கை நடவடிக்கை இங்கு எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


திரும்பவும் துரைமுருகன் எழுந்து...."அந்த கிருமி நாசினியை அடிங்க... எங்களால திரும்ப திரும்ப இடைத்தேர்தல்களை சந்திக்க முடியாது" என்றார். இதையடுத்து சபாநாயகர் தனபால், "கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன... அவையில் ஏ.சி குறைத்து வைக்கப்பட்டுள்ளது... கிருமி நாசினியும் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மாஸ்க் தரப்படும் அளிக்கப்படும்என்றார்


 


Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
பாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..!!
Image
முகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்!!!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image