வீட்டிலிருந்தே பணி செய்ய ஐடி நிறுவனங்களுக்கு உத்தரவு

சென்னையில் இயங்கும் சில ஐடி நிறுவனங்கள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன.


ஓஎம்ஆர் சாலையில் இயங்கிவரும் ஐடி நிறுவனங்களில் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணியாற்றிவருகின்றனர்.


இந்நிலையில், வீட்டிலிருந்தே பணியாற்றக்கூடிய வாய்ப்புள்ள ஊழியர்கள், அலுவலகங்களுக்கு வராமல் வீட்டிலிருந்தே பணியைத் தொடரலாம் என சில ஐடி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


தற்போது சுமார் 30% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றி வருவதாகவும், அடுத்துவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.