கொரோனாவை கட்டுப்படுத்தும் தமிழர்களின் பாரம்பரிய உணவு

தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருட்களில் ஒன்றான ரசம் தற்போது கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் பொருளாக வெளிநாடுகளில் விற்கப்பட்டு வருகிறது.


சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்டுள்ளது. இதையடுத்து தமிழர்களின் பாரம்பரிய உணவான ரசத்திற்கு திடீரென அதிர்ஷ்டம் அடித்துள்ளது.


ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, பூண்டு போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ரசப்பொடி அதிக அளவில் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.


இதேபோல் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொடிக்கும் வெளிநாடுகளில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரசம் சாப்பிடுங்கள்.ஆரோக்கியமாக இருங்கள் என்ற வாசகம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.